வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரஜினி சினிமாவுக்கு முழுக்கு போட உதவி செய்யும் மகள்கள்.. அடுத்து தோல்வியை உறுதி செய்த சௌந்தர்யா

Rajini : கண்டக்டராக இருந்த ரஜினி இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பதற்கு இயக்குனர் இமயம் பாலச்சந்தர் முக்கிய காரணம். அதோடு ரஜினியின் ஸ்டைல் மற்றும் நடிப்பும் அவரது படங்களுக்கு ஹிட்டாக உதவியது. படிப்படியாக சினிமாவில் முன்னேறி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கிறார்.

விஜய்யும் இப்போது அரசியலில் இறங்க உள்ளதால் ரஜினி இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்க முடியும். ஆனால் அவரை ஒரேடியாக சினிமாவில் முழுக்கு போட வைக்கும் முயற்சியில் ரஜினியின் மகள்கள் இறங்கி உள்ளார்கள்.

அதாவது தொடர்ந்து ரஜினி தோல்வி படங்கள் கொடுத்த நிலையில் ஜெயிலர் படம் ஒரு மாபெரும் வெற்றி கொடுத்திருந்தது. அடுத்ததாக இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தாறுமாறாக ரஜினி மற்றும் லோகேஷ் காம்போவில் ஒரு படம் உருவாக இருக்கிறது.

Also Read : என் புருஷன வச்சு கல்லா கட்டலாம்னு பாக்குறியா.? அக்கா தங்கச்சி சண்டையால் நிம்மதியை தொலைத்து வரும் ரஜினி

ஆனால் இப்போது ரஜினி செம அப்செட்டில் இருக்கிறார். இதற்கு காரணம் சமீபத்தில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரஜினியின் மார்க்கெட்டை க்ளோஸ் செய்த நிலையில் இப்போது சௌந்தர்யாவும் போட்டிக்கு இறங்கி இருக்கிறார்.

லால் சலாம் படத்தில் நடித்தது போல் தனக்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். ரஜினியும் எதுவும் சொல்ல முடியாமல் சௌந்தர்யா படத்தில் நடிக்க சம்மதம் கூறியிருக்கிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் ரஜினி கோச்சடையான் படத்தில் நடித்த நிலையில் படம் படு பிளாப் ஆனது. தற்போது மீண்டும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரஜினியின் மார்க்கெட்டை மாறி மாறி குறைத்து வருகிறார்கள்.

Also Read : சன் பிக்சர்ஸ் கலாநிதி ஆரம்பித்து வைத்த புது கலாச்சாரம்.. சோலியை முடித்த ரஜினி

Trending News