புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும்.. புது திட்டம் போட்டு பகல் கனவு காணும் பிக்பாஸ் விஷ பாட்டில்கள்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் உனக்கு நான் சளைத்தவர் இல்லை என்ற கதையாக விளையாடி வருகின்றனர். இதில் நரி தந்திரத்துடன் செயல்படும் போட்டியாளர்களும் இருக்கின்றனர். அதனாலேயே இந்த சீசன் வழக்கத்திற்கு மாறாக சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

அதில் பிக்பாஸ் விஷ பாட்டில்கள் தற்போது போட்டிருக்கும் திட்டம் தான் இது என்ன புதுசா இருக்கு என்ற கதையாக உள்ளது. அதாவது இந்த விளையாட்டின் ஆரம்பத்திலிருந்து தனக்கென ஒரு கேம் ப்ளானோடு விளையாடி வருபவர் தான் மாயா. சில சமயங்களில் இவர் விஷ பூச்சி போல் செய்யும் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை கடுப்பேற்றும்.

இவருடன் சேர்ந்து கொண்டு பூர்ணிமா அடிக்கும் கொட்டம் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு விஷ பூச்சியும் சேர்ந்து நிக்சனின் வாழ்க்கையில் தற்போது கபடி ஆடி வருகின்றனர். அதாவது ஐஷு தன்னையே சுற்றி சுற்றி வரும் நிக்சனை வைத்து டபுள் கேம் ஆடி வருகிறார்.

Also read: பிக்பாஸ் வரலாற்றை மாற்றிய வைல்ட் கார்டு என்ட்ரி.. ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய அனுதாப ஓட்டிங் லிஸ்ட்

இது ஒரு பக்கம் இருக்க இவர்களின் விஷயத்தில் சம்பந்தமில்லாமல் உள்ளே நுழைந்த மாயா ஐடியா கொடுக்கிறேன் என்ற பெயரில் மொத்தத்தையும் குழப்பி வேடிக்கை பார்க்கிறார். அதன்படி நிக்சன் ஐஷுவிடம் எங்க வீட்டுக்கு வா என்று கூறி அதிர வைத்த நிலையில் மாயா ஒரு பக்கம் உங்க அம்மா அப்பா சேர்த்துக்கலன்னா என் வீட்டுக்கு போ நான் வெளியில் வரும்போது பார்க்கலாம் என்று ஒரு குண்டை போட்டார்.

ஆக மொத்தம் ஐஷு எப்படியும் வெளியில் சென்று விடுவார் என்பது அவருக்கே உறுதியாக தெரிகிறது. இந்த சூழலில் மாயா, பூர்ணிமா இருவரும் நிக்சன் ஐஷுவால் கோமாளி ஆகி வெளியில் சென்று விடுவார் என ஹஸ்க்கி வாய்ஸில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்பு சப்போர்ட் செய்வது போல் பேசிவிட்டு பின்னால் இவர்கள் பேசும் இந்த புறணி தான் பார்ப்பவர்களை காண்டாக்கி வருகிறது.

அதைத்தொடர்ந்து பூர்ணிமா, அப்ப நீ வின்னர் நான் ரன்னர் என்று மாயாவிடம் சிரிக்காமல் காமெடி செய்ததை பார்க்கும்போது எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் என தோன்றுகிறது. இப்படி நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் என்ற கதையாக பகல் கனவு கண்டு வரும் இவர்களுடைய திட்டம் எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதை நாம் அடுத்தடுத்த வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: நிக்சனை வைத்து டபுள் கேம் ஆடும் ஐஷு.. பிக்பாஸை அலறவிட்ட சைக்கோ தான் இவர் காதலனா?

Trending News