Vijay Tv: கதாநாயகிகளுக்கு இணையான ரசிகர்களை ஒரு காலத்தில் பெற்றிருந்தவர் தான் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. டிடி என்ற அன்போடு அழைக்கப்படும் இவர் விஜய் டிவியில் பல வருடங்களாக பணியாற்றி வந்தார். ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
டிடி தனது இன்ஸ்டால் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு கடந்த மூன்று மாதங்களாக தான் அனுபவித்த வேதனை காலத்தை பற்றி விவரித்து உள்ளார். இது அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வேதனை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்ரேஷன் தியேட்டரில் டிடி
டிடி விஜய் டிவியை விட்ட விலகுவதற்கு காரணம் அவரது உடல்நிலை தான். கடந்த 10 ஆண்டுகளாக அவரது காலில் பிரச்சனை இருந்து வருகிறது. இதுவரை 4 சர்ஜரி செய்து இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது வலது காலில் மிகப்பெரிய சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
சர்ஜரி செய்யப்பட்ட கால்
அந்த நாட்கள் தன்னுடைய வாழ்நாளில் மிகவும் வேதனையான நாட்கள் என்று டிடி பதிவிட்டு இருக்கிறார். டிடியால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இப்போது இந்த சர்ஜரிக்குப் பிறகு புது காலுடன் வருகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.
தன்னம்பிக்கையுடன் இருக்கும் டிடி
மேலும் எனக்காக பிரார்த்தனை செய்த நண்பர்களுக்கு நன்றி மற்றும் என்னை நன்றாக பார்த்துக் கொண்ட மருத்துவர்களுக்கும் நன்றி என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய அபாயத்திலிருந்து டிடி மன தைரியத்துடன் வந்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
அதோடு பழையபடி டிடி தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அவார்ட் நிகழ்ச்சிகள், பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் ஆகியவற்றை தொகுத்து வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். முன்பு இருந்ததை விட இன்னும் உத்வேகத்துடன் டிடி வர உள்ளார்.
சூடு பிடிக்கும் விஜய் டிவி சீரியல்
- எதிர்நீச்சல் சீரியலை மறக்கடிக்க செய்த சன் டிவியின் புத்தம் புது சீரியல்..
- பாக்கியலட்சுமிக்கு முன் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கியமான சீரியல்..
- கூட்டணியை பிரிக்க தங்கமயிலை தூண்டிவிட்ட சம்மந்தி