ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டிசம்பர் மாதம் வெளியாகும் 12 படங்கள்.. மிகுந்த எதிர்பார்ப்பில் விடுதலை 2

December Release Movies : கடந்த மாதங்களில் அமரன், பிரதர், ப்ளடி பக்கர் போன்ற படங்கள் வெளியான நிலையில் டிசம்பர் மாதம் பெரிதும் எதிர்பார்க்கும் படங்கள் வெளியாகிறது. வருடத்தின் கடைசி மாதமாக இருந்தாலும் ரசிகர்களை மகிழ்விக்க வரும் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 தி ரூல் படம் வெளியாகிறது. இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது. அடுத்ததாக டிசம்பர் 6 ஆம் தேதி ஃபேமிலி படம் மற்றும் தூவல் ஆகிய படங்கள் வெளியாகிறது.

ரஜினி, மம்முட்டியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற தளபதி படம் டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் கடந்த மாதம் மிஸ் யூ படம் வெளியாகும் என்ற எதிர்பார்த்த நிலையில் கனமழையால் தள்ளிப்போனது.

டிசம்பர் மாதம் வெளியாகும் 12 படங்கள்

இந்த சூழலில் வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதி மிஸ் யூ படம் தியேட்டரில் வெளியாகிறது. மேலும் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் சூது கவ்வும் 2 படமும் இதே நாளில் வெளியாகிறது. தம்பி ராமையா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜாகிளி படமும் அதே நாளில் வெளியாகிறது.

டிசம்பர் 20ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை 2 படம் வெளியாகிறது. மேலும் இதே நாளில் பாட்டில் ராதா மற்றும் திரு மாணிக்கம் ஆகிய படங்களும் தியேட்டரில் வெளியாகிறது.

டிசம்பர் 27ஆம் தேதி அலங்கு என்ற படம் வெளியாகிறது. நாய்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதே நாளில் இளங்கோ, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள கஜானா படமும் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. ஆகையால் இந்த மாதம் ரசிகர்களுக்கு சம ட்ரீட் ஆக அமைய உள்ளது.

Trending News