புதன்கிழமை, ஜனவரி 15, 2025

படத்தை பார்த்துட்டு எதனாலும் பேசணும்.. ரசிகர்களை மிரட்டும் வடிவேல்

கிட்டத்தட்ட 2010ஆம் ஆண்டு வாக்கில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு விளம்பரமாகவே அமைந்திருந்தவர் நடிகர் வடிவேலு. சிறு நடிகர்கள் நடித்து சிறிய பட்ஜெட்டில் இவர் நடித்த படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் பிரபலமான அளவிற்கு அந்த படங்கள் கூட ரசிகர்களை சென்றடைந்திருக்காது. அந்த அளவிற்கு பெரும் பரபரப்பான நடிகரான பிஸியாக நடித்து வந்திருந்தார் வடிவேலு.

கொடி கட்டி பறந்த காலத்தில் தீடீரென அரசியல் பிரவேசம் செய்தார். தி.மு.கவை ஆதரித்து இவர் அ.தி.மு.காவை எதிர்த்ததை விட சக ஊர்க்காரரான விஜய்காந்தை பெரிதும் இழிவாக பேசினார். மேலும் படத்தில் நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என பல்வேறு நிபந்தனைகள் வைப்பது என தொடங்கி, தயாரிப்பாளர்களுடன் சண்டை என நடிப்பதற்கு ரெட் கார்ட் பெற்று மொத்தமாகவே படங்களில் இருந்து காணாமல் போனார்.

இந்த பிரச்சினை எல்லாம் தற்போது நீங்கி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் மீண்டும் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இது போக, நாய் சேகர் என்ற படத்தில் நாயகனாகவும், சிவ கார்த்திகேயனுடன் ஒரு படம் என சுறுசுறுப்பாக நடித்து துவங்கியுள்ளார். இருப்பினும் பழைய படி போல் காமெடியில் மீண்டும் கலக்குவீர்களா? என பலரும் அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, படமே இன்னமும் எடுத்து முடிக்க படவில்லை, அனைத்தும் முடிந்து படம் வெளியாகட்டும் அப்போது மற்றதை பேசிக்கொள்வோம் என தனது பாணியில் பதில் கூறி வருகிறார் வடிவேலு. படத்தில் என்னுடைய காமெடியை பார்த்துட்டு எதனாலும் பேச வேண்டும் ஒவ்வொரு சீனும் அவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது. உங்களை சிரிக்க வைக்கிறேன் நான் மீண்டும் வந்துள்ளேன் எனவும் நம்பிக்கையாக கூறி வருகிறார்.

ரசிகர்கள் அவ்வாறு கேட்பதற்கு சில காரணங்களும் உள்ளது. ஏனேனில், இந்த படம் அவருடைய கம்பேக் படமல்ல. ஏற்கனவே விஜய்யின் மெர்சல், விஷாலுடன் கத்தி சண்டை போன்ற படங்களில் நடித்திருந்தார். என்றாலும் அந்த படங்களில் அவருடைய காமெடி காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திடவில்லை. இதனாலேயே இவ்வாறான கேள்விகள் தற்போது கேட்கப்படுகிறது.

எது எவ்வாறே அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து நடிகர் வடிவேலு தனது பழைய பாணியில் அவர் கூறியது போலவே ரசிகர்களை மீண்டும் காமெடி காட்சிகள் மூலம் சிரிக்க வைக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக உள்ளது. அந்த ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News