சினிமாவை பொருத்தவரை பல நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதையை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு கஷ்டமும் அனுபவிக்காமல் படங்களில் நடித்து விட்டு சென்று விடுவார்கள்.
தமிழ் படத்தில் டைட்டில் கார்டு போடும்போது விலங்கு மற்றும் பறவைகள் துன்புறுத்துவதில்லை என்று போடுவார்கள் அது விலங்குகள், பறவைகளுக்கு மட்டும் தான் பொருந்துமே தவிர ஒரு சில நடிகர்களுக்கு பொருந்தாது ஏனென்றால் உடலை வருத்தி நடிக்கக்கூடிய நடிகர்களும் சினிமாவில் உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல்ஒரு சில நடிகர்கள் படத்தில் நடித்தால் போதும் என நினைக்காமல் இவர்களது வாழ்க்கையில் பேசக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களது உடலை வருத்தி நடிப்பார்கள். அப்படி நடித்த நடிகர்கள் யார் யார் என்னென்ன படங்கள் பார்ப்போம்.
மரியான். மரியான் படத்தில் தனுஷ் கடலில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து கடல் அடியில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அதேபோல் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட சிறுத்தை சீனிலும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.
விக்ரம். விக்ரம் நடிப்பில் உருவான ஐ படத்தில் பாடி பில்டராக இருந்து பின்பு எலும்பும் தோலுமாய் விக்ரம் இருப்பார். ஒரு முறை படப்பிடிப்புத் தளத்திலேயே நிற்கமுடியாமல் மயங்கி விழுந்துள்ளார் அந்த அளவிற்கு படத்தில் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் விக்ரம்.
அவன் இவன். பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷால் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் விஷால் 2 கண்களும் ஒன்றாக சேர்த்து வைத்து நடித்திருப்பார்.தற்போது வரை விஷால் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்பட்டு வருகிறார்.
வாரணம் ஆயிரம். சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்திற்காக சூர்யா உடலமைப்பில் பல்வேறு விதமாக மாற்றி உடம்பை வருத்தி நடித்து இருப்பார்.
பரத். தமிழ் சினிமாவில் ஒரு சில வெற்றிப் படங்கள் கொடுத்து அதன் பிறகு வெற்றிக்காக உழைத்து வருபவர் பரத். இவர் நடிப்பில் வெளியான 555 படத்தில் மிகவும் சிரமப்பட்டு உடலை வருத்தி நடித்திருப்பார்.
ஷாம். விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் நண்பனாக நடித்தவர் ஷாம். அதன் பிறகு பல நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான 6 மெழுகுவர்த்தி படத்திற்காக உடலை வருத்தி நடித்துள்ளார்.
கமல்ஹாசன்
இவர்கள் அனைவருக்கும் குருவாக இருப்பவர் தான் கமல்ஹாசன். அதாவது கமல்ஹாசன் பொருத்தவரை ஒரு கதாபாத்திரத்துக்கு என்னென்ன தேவையோ அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு நடித்துக் கொடுப்பார்.
இவ்வளவு ஏன் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு நடிகர் என்றால் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் தான். ஆனால் கமல்ஹாசன் அதை சற்றும் தலைக்கு ஏற்றுக் கொள்ளாமல் படத்தின் கதாபாத்திரத்திற்கு கோமணம் கட்டி நடிக்கச் சொன்னால் கூட நடித்துக் கொடுப்பார்.
அந்த அளவிற்கு சினிமாவின் மீது அளவுகடந்த ஆர்வத்தை வைத்துள்ளார்.நடிப்பு என்றாலே ரசிகர்களுக்கு தாண்டியும் நடிகர்களுக்கு ஞாபகமாக இருப்பார்கள் தான் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.