வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வனில் நயன்தாரா குரலா? நந்தினியின் கம்பீரக் குரல் இவருடையதுதான்

அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை லைகா ப்ரொடக்சனும் மெட்ராஸ் டாக்கீசும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். பொன்னியின் செல்வனின் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.

பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகிறது. த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம், பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்யாராய், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கூடி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

Also Read: பொன்னியின் செல்வன் கதையை காப்பி அடித்த ராஜமௌலி.. இந்த நாலு ஆதாரம் போதும்

இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் 5 மொழிகளிலும் அவரே டப்பிங் பேசி அசத்தி இருக்கிறார். குந்தவை தேவியான த்ரிஷாவும் இந்த படத்திற்காக சொந்தக்குரலில் பேசியிருக்கிறார். பூங்குழலியான ஐஸ்வர்யா லட்சுமிக்கும் சொந்த குரல் தான். இந்த படத்திற்கான டப்பிங் வேலைகள் கடந்த 2021 செப்டம்பர் மாதம் தொடங்கியது.

பொன்னியின் செல்வனில் முக்கியமான கேரக்டர்கள் என்றால் அது நந்தினியும், மந்தாகினியும் தான். மந்தாகினிக்கு ஊமை ராணி என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த இரண்டு கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். ஆதித்த கரிகாலன் மீதான தீராத பகை, சோழ சாம்ராஜ்யத்தை வேருடன் சாய்க்க பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொள்ளும் நந்தினி ஒரு பேரழகி. அந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தான் பொருத்தமாக இருக்கிறார்.

Also Read: பொன்னியின் செல்வன் படத்தை கைப்பற்றிய பிரபல ஒடிடி நிறுவனம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

நந்தினி அழகானவனள் மட்டுமல்ல அதிக தைரியமும், கம்பீரமும் கொண்டவள். அவள் குணத்தை பிரதிபலிக்கும் விதமாக அவளுடைய குரல் ட்ரைலரில் இருந்தது. இந்த குரலுக்கு சொந்தக்காரர் பிரபல சீரியல் நடிகை தீபா வெங்கட் தான்.

தீபா வெங்கட் நயன்தாராவின் ஆஸ்தான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ராஜா ராணி, தனி ஒருவன், இது நம்ம ஆளு, காஷ்மோரா, வேலைக்காரன், இமைக்கா நொடிகள், வாசுகி, மிஸ்டர் லோக்கல், விஸ்வாசம், பிகில், தர்பார், மூக்குத்தி அம்மன், அண்ணாத்தே போன்ற பல படங்களில் இவர் நயன்தாராவுக்கு டப்பிங் பேசி இருக்கிறார்.

Also Read: பொன்னியின் செல்வனை புறக்கணிக்க போட்ட டிராமா.. விக்ரமின் கோபத்திற்கு காரணம் இதுதான்

Trending News