Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

களையிழந்த தீபாவளி.. முன்னணி நடிகர்களின் படங்கள் இல்லாமல் வெறிச்சோடிய சினிமா!

களையிழந்த தீபாவளி.. முன்னணி நடிகர்களின் படங்கள் இல்லாமல் வெறிச்சோடிய சினிமா!

தீபாவளி என்றால் குறைந்தபட்சம் 3 அல்லது 4 பெரிய கதாநாயகர்களின் படங்கள் திரையரங்குகளில் மோதி பாக்ஸ் ஆபீஸை சூடாக்கும். ஆனால், இந்த ஆண்டு சூர்யாவின் ‘சீன்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய […]

தீபாவளி என்றால் குறைந்தபட்சம் 3 அல்லது 4 பெரிய கதாநாயகர்களின் படங்கள் திரையரங்குகளில் மோதி பாக்ஸ் ஆபீஸை சூடாக்கும். ஆனால், இந்த ஆண்டு சூர்யாவின் ‘சீன்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய இரண்டு படங்களைத் தவிர, பிற பெரிய நட்சத்திரங்களின் படங்கள் இல்லாதது பெரிய ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

தமிழை விடவும் ஆந்திரா மற்றும் தெலங்கானா நிலவரம் மிகவும் மோசமாக மாறியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி மாஸ் கதாநாயகர்களான பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் அல்லது ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் நேரடிப் படங்கள் எதுவும் இந்தத் தீபாவளிக்கு இல்லை. பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் படங்களை மட்டுமே நம்பித் தெலுங்குத் திரையரங்குகள் இருக்கிறது.

பாலிவுட்டைக் பொறுத்தவரை, நிதேஷ் திவாரியின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணம்’ மட்டுமே இந்தத் தீபாவளியின் ஒற்றை நம்பிக்கையாகக் களமிறங்குகிறது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவான படத்தைத் தவிர்த்து, பிற பெரிய இந்தி நடிகர்களின் படங்கள் எதுவும் பண்டிகைக் காலத்தில் வெளியாகாதஏமாற்றம்தான்.

கன்னடத் திரையுலகின் நிலவரமோ இதையும் விடக் பரிதாபமாக உள்ளது. யஷ், தர்ஷன், சுதீப் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பிரம்மாண்ட வெளியீடுகள் எதுவும் இல்லாத நிலையில், அறிமுக அல்லது பெரிய அளவில் அறியப்படாத முகங்களைக் கொண்ட சிறிய திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு வருகின்றன.

முன்பெல்லாம் பண்டிகைக் காலம் வந்தாலே எந்தப் படத்திற்கு டிக்கெட் எடுப்பது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் அலைமோதுவார்கள். ஆனால், இந்த ஆண்டு தயாரிப்புச் செலவுகள் எகிறியது, OTT தளங்களின் ஆதிக்கம் மற்றும் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் படப்பிடிப்புத் தாமதங்கள் காரணமாக, அனைத்து மொழிகளிலுமே சினிமா அதன் பழைய கலையையும் உற்சாகத்தையும் இழந்து நிற்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.