புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எழில் கல்யாணத்தை நிறுத்த புது பிளானுடன் மண்டபத்திற்கு வரும் தீபிகா.. புத்திசாலித்தனமாக டீல் பண்ணும் கயல்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், போங்கய்யா நீங்களும் உங்க கல்யாணமும் என்று சொல்வதற்கு ஏற்ப கயல் மற்றும் எழிலின் திருமணம் பல மாதங்களாக இழுத்து அடித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது எல்லாம் கைக்கூடி வந்த நேரத்தில் புதுசு புதுசாக பிரச்சினைகளும் குழப்பங்களும் வந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் கயலை பரம எதிரியாக நினைத்த பெரியப்பாவே தற்போது திருந்தி கயல் கல்யாணத்தை யாரும் தடுக்க கூடாது. நான் நடத்தி வைப்பேன் என்ற எண்ணத்தில் மண்டபத்தில் இருக்கும் பாமை எடுக்கும் அளவிற்கு உயிரை பணயம் வைக்க துணிந்து விட்டார். அந்த அளவிற்கு கயல், பெரியப்பாவிடம் செண்டிமெண்டாக பேசி மனசை மாற்றி இருக்கிறார்.

ஆனால் யார் என்ன சொன்னாலும் நான் திருந்தவே மாட்டேன் என்பதற்கு ஏற்ப எழிலின் அம்மா சிவசங்கரி பிடிவாதமாக கயலின் கல்யாணத்தை நிறுத்துவதற்கு கடைசி நிமிஷம் வரை பிளான் பண்ணி வருகிறார். இதில் மூர்த்தியை கொலை பண்ணி அதன் மூலம் கல்யாணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிவசங்கரி கொலைகாரியாக துணிந்து விட்டார்.

ஆனால் மூர்த்தி தன்னுடைய தங்கை கல்யாணத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று கத்திக்குத்தியுடன் மண்டபத்தில் நிற்கிறார். இந்த சூழ்நிலையில் மறுபடியும் வேற ஒரு பிளானை போடும் விதமாக தீபிகா அப்பாவுடன் சேர்ந்து சிவசங்கரி ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் எழில் கல்யாணத்தை நிறுத்துவதற்கு தீபிகாவை பகடைக்கையாக பயன்படுத்தி மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப் போகிறார்.

எழில், கயல் கழுத்தில் தாலி கட்டும் அந்த நேரத்தில் தீபிகா மண்டபத்திற்கு வந்து கல்யாணத்தை நிறுத்துகிறார். அத்துடன் தன் வயிற்றில் எழில் குழந்தை இருக்கிறது என்று வாய் கூசாமல் பொய் சொல்லி அனைவரையும் திசை திருப்பப் பார்க்கிறார். தீபிகா என்ன சொன்னாலும் கயல் நம்ப மாட்டார் என்று நன்றாகவே தெரியும். தெரிந்தும் தீபிகா இந்த அளவுக்கு ஒரு முடிவுடன் வந்திருக்கிறார் என்றால் இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு விஷயம் இருப்பது போல் தெரிகிறது.

ஆனாலும் இந்த ஒரு விஷயத்தை கயல் நிச்சயமாக புத்திசாலித்தனத்துடன் டீல் பண்ணி எழில் கையால் தாலி வாங்கி கொள்வார். ஆனால் அதற்கு முன் சிவசங்கரி மனசை மாற்றி முழுமையாக மருமகளாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு கயல் செண்டிமெண்டாக பேசி அவரையும் திருத்தி விடுவார். கடைசியில் கல்யாணம் முடித்த கையுடன் மூர்த்தி கீழே விழுந்து மயக்கம் ஆகிவிடுவார்.

பிறகு அனைவரும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு மூர்த்தியை பிழைக்க வைத்து விடுவார்கள். கடைசியில் எல்லோரும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் அந்த ஒரு தருணத்தில் சுபம் போட்டு கயல் சீரியலை முடித்து விடப் போகிறார்கள்.

Trending News