புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லலித் டார்ச்சர், லியோ காட்டிய பயம்.. லோகேஷ்க்கு ரஜினி கொடுத்த அட்வைஸ், தள்ளிப்போகுமா தலைவர்-171.?

Thalaivar 171-Lokesh: லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்வதாக சமீபத்தில் கூறியிருந்தார். முதல் பாகம் மிகவும் அபாரமாக இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இந்த தொய்வு ஏற்படுவதற்கு காரணம் லோகேஷுக்கு இருந்த மன அழுத்தம் தான்.

அதாவது என்னதான் பக்கவாக பிளான் போட்டு காயை நகரத்தினாலும் ஒரு எல்லையை நிர்ணயத்த பிறகு பதட்டம் என்பது கண்டிப்பாக வரதான் செய்யும். அந்த வகையில் லியோ படத்தின் பூஜை போடப்பட்ட போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து இருந்தது. எந்த குளறுபடியும் இல்லாமல் அக்டோபர் 19ஆம் தேதி லியோவை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் லோகேஷ் செயல்பட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் லோகேஷுக்கு டார்ச்சர் கொடுத்ததாக பல விமர்சகர்கள் கூறியுள்ளனர். எப்போதுமே லோகேஷ் படத்தின் வசூல் குறித்து தனக்கு கவலை இல்லை என்று பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்தே லலித் மற்றும் லோகேஷ் இடையே ஒரு மன கசப்பு இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால் தலைவர் 171 படத்தில் நிதானமாக லோகேஷ் செயல்பட இருக்கிறார். லியோ படத்தில் செய்த எந்த தவறையும் இந்த படத்தில் செய்ய வேண்டாம் என ரஜினி தரப்பில் இருந்து லோகேஷுக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் தலைவர் 171 படத்திற்கு கிட்டத்தட்ட 6 மாதம் லோகேஷ் இடைவெளி எடுக்க இருக்கிறார். மேலும் ஸ்கிரிப்ட்டை தயார் செய்த பிறகு தான் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார். லியோவில் என்னென்ன நெகட்டிவ் விமர்சனங்களை லோகேஷ் சந்தித்தாரோ அதை ஆராய்ந்து தலைவர் 171 இல் செயல்பட இருக்கிறார்.

எனவே எந்த பதட்டமும் இல்லாமல் பொறுமையாக இனி லோகேஷ் பணி செய்ய உள்ளார். மேலும் தலைவர் 171 படம் எல்சியுவில் இடம்பெறாது என்பதை ஏற்கனவே லோகேஷ் கூறியிருக்கிறார். ரஜினியை வைத்து செம மாசான கதையை ஆறு மாதம் தயார் செய்து விட்டு படப்பிடிப்பை லோகேஷ் தொடங்க உள்ளார். மேலும் இப்படம் தாமதம் ஆனாலும் தரமாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News