Demonte Colony 2: சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கலான், ரகு தாத்தாவுடன் டிமான்ட்டி காலனி 2 படமும் ரிலீஸ் ஆனது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் இதன் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி சக்கை போடு போட்டது.
அதையடுத்து இரண்டாம் பாகத்தின் டிரைலரும் மிரட்டலாக இருந்தது. இதுவே ஆர்வத்தை அதிகரித்த நிலையில் படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தது. அதைத்தொடர்ந்து படத்தின் வசூலும் லாபம் தான்.
அந்த வகையில் படம் வெளியான முதல் நாளிலேயே 3.55 கோடிகளை வசூலித்திருந்தது. அதை அடுத்து இரண்டாவது நாளில் 2.35 கோடிகளும் மூன்றாவது நாளில் 4.5 கோடிகளும் வசூல் ஆனது.
சைலன்டா சம்பவம் செய்த அருள்நிதி
இப்படி நாளுக்கு நாள் அதிகரித்த இந்த வசூல் தற்போது ஒன்பதாவது நாளின் முடிவில் 21 கோடியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த வாரம் இப்படம் தமிழக அளவில் 275 ஸ்கிரீன்களில் ஒளிபரப்பானது.
ஆனால் இரண்டாவது வாரத்தில் 350 ஸ்கிரீன்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அதிகபட்ச வரவேற்பு தான். இந்த வாரம் மாரி செல்வராஜின் வாழை, சூரியின் கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் அதைத் தாண்டி டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு ஸ்கிரீன்கள் அதிகப்படுத்தபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிற.து அந்த வகையில் இந்த பாகம் வெற்றியடைந்த நிலையில் பட குழு மூன்றாவது பாகத்திற்கு இப்போது தயாராகி வருகின்றனர்.
ரசிகர்களின் பாராட்டு மழையில் டிமான்ட்டி காலனி 2
- தங்கலான், டிமான்ட்டி காலனி 2 வசூலில் பின் வாங்கிய கீர்த்தி சுரேஷ்
- பார்ட் 2 ராசியை முறியடிக்குமா டிமான்ட்டி காலனி 2.?
- அருள்நிதியை சுற்றும் அமானுஷ்யம்