சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சுந்தர் சி, லாரன்ஸ் 2 பேரையும் ஓரங்கட்டிய டிமான்டி ஞானமுத்து.. சாமியை நம்பாமல் கையில் எடுத்த அஸ்தரம்

எடுத்த நான்கு படங்களில் ஒன்று மட்டும் தவறி உள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் என்றால் இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு அலாதி பிரியம் தான். அப்படி ஆரம்பித்தது தான் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமான்டி காலனி 2.

இதில் விக்ரமை வைத்து இயக்கிய கோப்ரா மட்டும் மண்ணை கவ்வியது. எல்லா பக்கமும் இந்த படத்தை கழுவி ஊற்றினார்கள். பட்ட அடியால் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நின்று பதரடித்திருக்கிறார் அஜய் ஞானமுத்து. டிமான்டி காலனி 2 படத்தை ஹாலிவுட் பாணியில் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

வழக்கம்போல் பாலடைந்த பங்களாவில் பேய், அரண்மனையில் பேய் என்று காட்டாமல் இதில் வித்தியாசமாய் ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டில் பேய்களை காட்டி மிரட்டி இருக்கிறார். அதைப்போல் சுந்தர் சி, லாரன்ஸ் மாஸ்டரின் அம்மன் சாமிகளுக்கு விடை கொடுத்து இருக்கிறார்.

சாமியை நம்பாமல் கையில் எடுத்த அஸ்தரம்

படத்தில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் அபாரம். ஆரம்பத்தில் இருந்தே இதில் அமானுஷ்யங்களை விட சாம் சி எஸ் இன் இசை தான் பயமுறுத்துகிறது. திரைக்கதைகளை மிக கச்சிதமாக கையாண்டிருக்கிறார்கள். ப்ரியா பவானி சங்கருக்கு இந்த படம் ஒரு டர்னிங் பாயிண்ட் என்று கூறலாம்.

மாய உலகத்திற்கு செல்லும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா போல் இல்லாமல் புத்த துறவிகளை வைத்து அமானுஷ்யங்களை விரட்டுவது புதிதாக உள்ளது. முதல் காட்சியிலிருந்து கடைசி வரை ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறது டிமாண்டிக் காலனி 2

Trending News