காலையில் பக்தி, மதியம் புயல், இரவு பேய்.. விஜய் டிவியில் புத்தம் புதுசாக வரும் 3 சீரியல்கள்

Vijay Tv Serial: ஒரே மாதிரி சீரியல் இருந்தால் போர் அடிக்கும் என்பதற்காக விஜய் டிவி சேனல் வித்தியாசமான சீரியல்களை களம் இறங்குகிறார்கள். அதிலும் சன் டிவி மற்றும் ஜீ தமிழுக்கு போட்டியாக சீரியல்கள் இருக்க வேண்டும் என்பதற்காக டப்பிங் சீரியலாக இருந்தாலும் பரவாயில்லை. அது மக்களை கவர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது என்றதும் அந்த சீரியலை தமிழில் ஒளிபரப்பு செய்ய தயாராகி விட்டார்கள்.

அப்படி விஜய் டிவியில் புத்தம் புதுசாக மூன்று சீரியல்கள் வரப்போகிறது. இதில் காலையில் எழுந்ததும் பக்தி மயமாக இருக்க வேண்டும் என்ற காரணத்துடன் மக்களை கவரும் வகையில் சங்கடம் தீர்க்கும் சனி ஈஸ்வரன் என்ற தொடர் இன்று முதல் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்றலே மெல்ல பேசு என்ற சீரியல் வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி முதல் மதியம் 2.30 மணிக்கு புதுசாக வரப்போகிறது. அடுத்ததாக ஹிந்தியில் மோனலிசா என்ற கதாநாயகி நடித்து ஹிட்டான அதே கண்கள் என்ற சீரியல் விஜய் டிவியில் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது.

ஒரே மாதிரி சீரியல் இருந்தால் போர் அடிக்கும் என்பதற்காக அதே கண்கள் என்ற பேய் நாடகத்தை மறுபடியும் விஜய் டிவி கொண்டு வந்து டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →