புதன்கிழமை, ஜனவரி 29, 2025

பாக்யாவை ஓரங்கட்டி விட்டு குடும்ப பாரங்களை சுமக்க வரும் தனம் சீரியல்.. விஜய் டிவி எடுத்த உருப்படியான முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆன நிலையில் 1220 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. ஆரம்பத்தில் குடும்ப இல்லத்தரசிகள், பாக்யாவை கொண்டாடும் விதமாக விறுவிறுப்பான கதைகள் இருந்ததால் மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் போகப் போக இந்த நாடகத்தை தயவு செய்து முடித்து விடுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது.

ஆனாலும் விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து எந்தவித முடிவும் எடுக்காமல் தற்போது வரை பாக்கிய சீரியலில் அரைத்த மாவை அரைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் விதமாக விஜய் டிவி தற்போது ஒரு உருப்படியான முடிவை எடுத்திருக்கிறது. பாக்யாவை நீ கொஞ்சம் ஓரமாக ரெஸ்ட் எடு உனக்கு பதிலாக குடும்பப் பாரங்களை சுமக்க தனம் தயாராகி விட்டார் என்பதற்கு ஏற்ப தனம் சீரியல் வரப்போகிறது.

இந்த சீரியல் பிரேம் டைமிங் இல் ஒளிபரப்பாக வேண்டும் என்பதால் பாக்கியலட்சுமி சீரியல் முடிய போகிறது. அதற்கு பதிலாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரின் தங்கையாக ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யா கமிட்டாகி இருக்கிறார். இதில் இவருடைய கணவராக சன் டிவியில் வானத்தைப்போல, ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் நடித்த சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

அந்த வகையில் தனம் நாடகத்தின் கதையானது தனத்திற்கு கல்யாணம் பண்ண கொஞ்ச நாளிலேயே அவருடைய கணவர் ஸ்ரீகுமார் இறந்து விடுகிறார். ஆனால் இருப்பதற்கு முன் அவருடைய கனவுகளையும் ஆசைகளையும் தனம் தெரிந்து கொண்டார். அதன்படி கணவர் ஆசைப்பட்ட விஷயங்களை நிறைவேற்றும் விதமாக புகுந்த வீட்டில் குடும்ப பாரங்களை சுமக்கும் பொறுப்பில் ஆட்டோ ஓட்டும் கதாநாயகியாக தனத்தின் பயணம் தொடர போகிறது.

ஆனால் இந்த சீரியலின் ப்ரோமோவை பார்க்கும் பொழுது முழுக்க முழுக்க ஹீரோயின் கதையாகவும் கதாநாயகன் இறந்து போவதால் புகுந்த வீட்டு பாரங்களை சுமக்கும் தனி மனிதராக தனம் போராடப் போகிறார்.

Trending News