புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோபியின் சுயரூபத்தை பார்க்கும் தனம்.. அதிரடி திருப்பங்களுடன் மகா சங்கமம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர் மகாசங்கமமாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கோபியின் தந்தை ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து நகை எடுக்கலாம் என எண்ணியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க பாக்கியா மற்றும் தனம் இருவரும் சேர்ந்து ராதிகாவை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்துள்ளனர். இதனால் ராதிகா கோபியிடம் கண்டிப்பாக அந்த பர்த்டே பார்ட்டிக்கு போக வேண்டும் என உறுதிபடக் கூறுகிறார். ஆனால் கோபி நாம எவ்வளவு சொல்லியும் பாக்யா ராதிகாவை கூப்பிட்டு இருக்கா என்ன மிகுந்த கோபத்துடன் வீட்டுக்கு வருகிறார்.

ராதிகாவை எதுக்கு கூப்பிட்ட எனப் பாக்கியாவை கண்டபடி திட்டுகிறார். உடனே மூர்த்தி கோபியை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். அதன்பிறகு செல்வி தனத்திடம், சார் இப்ப சரியே இல்லை அவருக்கு வேற யாரோட தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு என கூறுகிறாள்.

இதனால் தனம் அதிர்ச்சி அடைகிறாள். ஏற்கனவே சென்ற முறை மகா சங்கமம்தின்போது கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பது மூர்த்திக்கும், தனத்திற்கும் சிறிது சந்தேகம் இருந்தது. இப்போது இந்த சம்பவம் மூலம் தனத்திற்கு மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் இந்த மகா சங்கமம் தற்போது சூடுபிடிக்க உள்ளது. மேலும், ராதிகா பிறந்தநாளுக்கு நிச்சயம் வருவார். அப்போது எல்லோரும் முன்னாடியும் கோபி மாட்டுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதில் இருந்தும் நம்ம தலைவன் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய ட்விஸ்ட்.

மேலும் கோபி, கண்ணன் காம்போ இடையிலான காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த வார மகா சங்கமம் வரஇருக்கிறது.

Trending News