வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அரை சதம் அடித்த தனுஷின் ராயன்.. அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே இத்தனை கோடியா.!

Raayan: தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரின் ஐம்பதாவது படமான ராயன் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர், பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டிக்கெட் முன்பதிவும் சாதனை படைத்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ராயன் வசூலில் பின்னி பெடல் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கோடிகளை அள்ளிய ராயன்

அந்த வகையில் கடந்த 18ஆம் தேதியே அரபு நாடுகளில் ராயன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. அதை அடுத்து ஜூலை 20ஆம் தேதி சென்னை, ஹைதராபாத் மற்றும் இலங்கையில் முன்பதிவு தொடங்கியது.

தனுசுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு தெலுங்கிலும் இருக்கின்றனர். இதனால் இந்த மாநிலங்களில் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் ராயன் படத்தை பிரீ புக்கிங் தொடங்கி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் ஓப்பனிங் முன்பதிவு 50 லட்சத்தை தாண்டி இருக்கிறது. வெளிநாடுகளிலும் ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ராயன் படத்தின் டிக்கெட் முன்பதிவு 1.5 கோடியாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு இன்னும் இரு நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. இப்படி அடங்காத அசுரனாக அரை சதம் அடித்துள்ள தனுசுக்கு ராயன் நிச்சயம் மாஸ் ஹிட் ஆக அமையும்.

முன்பதிவில் கலக்கும் தனுஷின் ராயன்

Trending News