வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பான் இந்தியா கதையில் நடிக்கும் தனுஷ்.. அப்புறம் என்ன இனி கொல குத்துதான்

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் மீண்டும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது புதிய கூட்டணியில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ராக்கி படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். ராக்கி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து சாணிக்காயிதம் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தற்போது அருண் மாதேஸ்வரன் தனது மூன்றாவது படத்தை தனுஷை வைத்து இயக்கயுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அருண் மாதேஸ்வரன் சாணிகாயிதம் படத்தின் மூலம் செல்வராகவனிடம் கிடைத்த நெருக்கத்தினால் தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படம் பான் இந்திய படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தனுஷின் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷூக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

Trending News