Dhanush going to act in the legend biopic: தனுஷ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறிவிட்டார். தற்பொழுது அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனுஷ் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் அமைகிறது. அந்த அளவுக்கு பொறுமையுடன் ஒரு படம் பண்ணாலும் ஒழுங்கா பண்ணனும் என்ற எண்ணத்தில் படம் செய்து வருகிறார்.
எப்பொழுதுமே தனுஷ் இளையராஜா மீது மிகுந்த மரியாதை உள்ளவர் அவர் பாடல்கள் மீது தனி கவனம் செலுத்தக் கூடியவர். இப்படி இருக்கையில் இளையராஜாவை யாரும் புகழாதவர்கள் இல்லை பாடல்களை கேட்காதவர்கள் இல்லை. ஆனால் இதில் தனுஷ் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார். பல ஹீரோக்களை இளையராஜா தன் பாடல் மூலம் வெற்றி பெற வைத்துள்ளார்.
முக்கியமாக தற்போது இருக்கும் ரஜினி, கமல் இவர்களே இளையராஜாவை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. ஆனால் தனுஷ் அவரைப் பற்றி படமாக எடுப்பது பாராட்டுக்கு உரியது. இந்த வரலாற்றை படமாக்க வெற்றிமாறனிடம் பேசப்பட்டுள்ளது. அவரும் கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியுள்ளார். இது தவிர தனுஷின் ஹிந்தி பட இயக்குனர் பால்கி அவர்களிடமும் பேசப்பட்டுள்ளது. அப்படி இல்லை என்றால் தனுஷ் இயக்க வாய்ப்பு இருக்கிறது.முக்கியமாக இதில் தனுஷ் இளையராஜாவாகவே நடிக்கப் போகிறார்.
ஆனால் இதில் ரஜினி நடித்தால் பொருத்தமாக இருக்கும் ஆனால் அதை தனுஷ் முயற்சி செய்யவில்லை நானே நடிக்கிறேன் என்று முடிவு செய்துவிட்டார். கண்டிப்பாக இது தேசிய விருது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்படுகிறது. இளையராஜாவுக்கு செய்யப் போகும் மரியாதையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய இசை ஞானி இளையராஜாவைப் போல் எந்த இசையமைப்பாளர்களும் இருந்ததில்லை. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து தற்பொழுதும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். 20000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை 50 வருடங்களில் செய்து முடித்த ஒரே இசை கலைஞர் இளையராஜா மட்டுமே.
இளையராஜா வாங்காத விருதுகளே இல்லை முக்கியமாக பத்மபூஷன், பத்ம விபூஷன் சங்கீத் நாடக் அகாடமிக் அவார்ட் என சொல்லிக்கொண்டே போகலாம். மேஸ்ட்ரோ என்ற பட்டத்தின் மூலம் பெருமையாக அழைக்கக்கூடிய இளையராஜாவிற்கு தனுஷ் செய்யும் காரியம் இந்தியாவை பாராட்டு வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் தனுஷ் இதன் மூலம் தேசிய விருது பெற பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்.