செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஹாலிவுட் ஹீரோயினுடன் கைகோர்க்கும் தனுஷ்.. பக்காவா பிளான் போட்ட செல்வராகவன்

தனுசுக்கு கோலிவுட்டில் பல ஹீரோயின்கள் வலைவிரித்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் செல்வராகவன் தன் தம்பிக்காக ஹாலிவுட் வரை சென்று நடிகையை பிடித்துள்ளார். தனது அடுத்த படத்தின் வெற்றிக்காக தனுஷ் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னை திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய தன்னுடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவனின் காம்போவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவனின் காம்போவில் வெளியான புதுப்பேட்டை, மயக்கம் என்ன, காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள் ஆகும். 2011ஆம் ஆண்டு மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு தற்போது நானே வருவேன் திரைப்படத்தில் அண்ணன் தம்பி இருவரும் கைக்கோர்த்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் தனுஷ் 2 வேடத்தில் நடிக்கிறார். அதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஹீரோயின் தேடுதலில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.

ஏற்கனவே நடிகை இந்துஜா தேர்வான நிலையில் மற்றொரு தனுஷின் கதாபாத்திரத்திற்கு ஹாலிவுட் நடிகை எல்லி அவுர் ரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் தமிழில் பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடித்திருக்கிறார்.

ஆனால் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆகையால் இதுவே இவரது முதல் தமிழ் படமாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஹாலிவுட் பாலிவுட் நடிகைகளுடன் தனுஷ் நடித்திருந்தாலும். தமிழில் ஹாலிவுட் நடிகையோடு முதல் முறையாக தனுஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Elli-AvRam
Elli-AvRam

Trending News