புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எஃப்ஐஆர் படம் பார்த்து தனுஷ் என்ன கூறினார் தெரியுமா.? ரிலீசுக்கு முன்பே வெளிவந்த விமர்சனம்

விஷ்ணு விஷாலுக்கு ஒரு பிரேக் கொடுத்த படம் என்றால் அது ராட்சசன். சஸ்பென்ஸ், த்ரில்லராக அமைந்த இந்தப் படம் அவருக்கு ஒரு கம் பேக் கொடுத்து நல்ல பெயரை வாங்கி கொடுத்தது,

இந்த படத்தின் மூலம் அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து நடிப்புக்கு சிறிது ஓய்வு கொடுத்திருந்தார்.

தற்போது அவர் FIR என்ற சஸ்பென்ஸ், திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார. இந்த படம் பல மடங்கு ராட்சசனுக்கு சமம். அந்தப் படத்திற்கும் மேல் இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நடிகர் தனுஷ் ப்ரிவ்யூ ஷோ பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

படத்தில் விஷ்ணு விஷாலை தவிர, கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு விஷ்ணு விஷாலுக்கு போன் செய்த தனுஷ், படம் நன்றாக வந்திருக்கிறது அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

FIR
FIR

ராட்சசன் படத்திலிருந்தே விஷ்ணு விஷாலுக்கு நல்ல ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன் பின் அவர் நடித்த காடான் படம் அவருக்கு செகண்ட் ஹீரோ சப்ஜெக்டாக அமைந்தது. கும்கி பட சாயலில் வந்த இந்த படத்தில் ராணா டகுபதி நடித்து அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News