Actor Dhanush: தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியது தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்களுடைய பிரிவு அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால் அதன் பிறகு தங்கள் வேலைகளை பார்த்து வந்த இவர்கள் எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்த்தோம். அதற்கேற்றார் போல் அவர்களுடைய குடும்பத்தினரும் சமரச முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனாலும் இவர்கள் சட்ட ரீதியாக பிரிய முடிவெடுத்து விட்டனர். எதனால் இந்த அவசரம் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் பத்திரிகையாளர் சந்தோஷ் ஜோசப் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அவசர விவாகரத்து
அதாவது தனுஷ், ஐஸ்வர்யா திருமணத்தில் லதா ரஜினிகாந்த்துக்கு ஆரம்பத்திலேயே உடன்பாடு இல்லை. ஆனால் அதை எல்லாம் தாண்டி எப்படியோ திருமணம் நடந்தது.
அதன் பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தாலும் சில மனக்கசப்புகள் இருந்து வந்திருக்கிறது. அதில் லதா குடும்பத்தினர் தனுஷின் பெற்றோர்களுக்கு சரியான மரியாதை தரவில்லை என்ற கோபமும் இருந்திருக்கிறது.
இப்படி பிரச்சனை பூதாகரமானதால் தான் இருவரும் பிரிய முடிவெடுத்து இருக்கின்றனர். தற்போது விவாகரத்து கேட்க காரணம் ஐஸ்வர்யாவுக்கு ஒரு உதவி இயக்குனருடன் காதல் இருக்கிறது.
திருமணத்திற்கு தயாராகும் தனுஷ், ஐஸ்வர்யா
தனுஷின் தரப்பு இது குறித்து கேட்ட போது கூட நீ யோக்கியமா என்ற பதில் தான் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா மறுமணம் செய்து கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதுபோல் தனுஷின் பெற்றோர்களும் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர். இப்படி பல இடியாப்ப சிக்கல்கள் தான் விவாகரத்து வரை கொண்டு சென்றிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பயில்வான் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் இது பற்றி கூறியிருக்கின்றனர். அந்த வகையில் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் இந்த அவசர விவாகரத்து திருமணத்திற்காக தானா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. எது எப்படி இருந்தாலும் கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.