Dhanush, Aishwarya : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்து செய்தி இப்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இருவரும் பிரியப்போவதாக அறிவித்த நிலையில் எப்படியும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் தங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என சமீபத்தில் இருவருமே நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். சட்டபூர்வமாக இருவரும் பிரிய நினைப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்துமே ஒரு நாடகமான ஒன்றுதான் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அதாவது இருவருமே இப்போதும் பரஸ்பரமான நட்பு மற்றும் காதல் இருந்து வருகிறது.
ஐஸ்வர்யா பெயரில் சொத்து வாங்கிய தனுஷ்
அதுவும் தனுஷ் மீது இன்னும் ரஜினியின் குடும்பம் அன்பு வைத்திருக்கிறது. அதோடு தனுஷின் சொத்துக்கள் எல்லாமே இப்போது தனுஷ், ஐஸ்வர்யா என இருவரின் பெயரில் தான் இருக்கிறது. இதை தனுஷ் தனியாக மாற்ற வேண்டாம் என்றும் கூறிவிட்டாராம்.
ஆனால் விவாகரத்திற்கு செல்ல காரணம் என்னவென்றால் ஒருவரின் சுதந்திரத்தில் மற்றொருவர் தலையிட வேண்டாம் என்று நினைக்கிறார்கள். இதனால் வெளியில் இவர்கள் விவாகரத்து என்று பதிவு செய்கிறார்கள்.
ஆகையால் இவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு இருக்கிறது. அதோடு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக அந்த அந்தணன் இருக்கிறார். வெளியில் இது விவாகரத்து என்று பெரிய அளவில் பேசப்பட்டாலும் இருவர் குடும்பத்திலும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் உள்ளனராம்.