வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தனுஷ் விவாகரத்தில் புது ட்விஸ்ட்டு.. அங்குட்டு போயி விளையாடுங்கபா என்று சொன்ன ஜட்ஜ்

அதான் புடிச்சுருக்குள்ள.. அப்புறம் என்ன.. இத்தனை வயதுக்கு பிறகு, இந்த முருக்கள், ஈகோ எல்லாம் தேவையா.. பேசாமல் கை குலுக்கி, கட்டி பிடித்துவிட்டு, ஒன்றாக வாழ ஆரம்பியுங்கள் என்று ரசிகர்கள் பல நாட்களாக கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்ல, சூப்பர்ஸ்டார், அவர் மனைவி லதா, குடும்பத்தினர்கள், உறவினர்கள் என்று எல்லோரும் இதை தான் சொல்லுகிறார்கள்.

ஆனால் முடியவே முடியாது ஒரு நிமிடம் கூட சேர்ந்து வாழ முடியாது என்றெல்லாம் சொல்லி பிரிய முடிவெடுத்து விவாகரத்து செய்ய கோர்ட் வரைக்கும் போயி மனு தாக்களும் செய்து விட்டனர். ஆனால் இந்த முறுக்கல் எல்லாம் மூன்று மாதம் தான். அதன் பிறகு, குழந்தைகளுக்காக அடிக்கடி சந்திப்பது, follow செய்வது, லைக் போடுவது என காதலை வெளியில் சொல்லாத காதலர்களை போல நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில், கோர்ட் நேரத்தை இவர்கள் வீணடித்து வருகிறார்கள். எத்தனையோ பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்க, இவர்களுக்காக கோர்ட் நேரத்தை ஒதுக்கினால், இவர்கள் ஆஜராகாமல் கண்ணாம்பூச்சியாட்டம் விளையாடுகிறார்கள்.

கடுப்பான ஜட்ஜ்..

முதலில் இவர்கள், 2004-ஆம் ஆண்டு நடந்த, திருமணத்தையே செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தினார். அதற்கான கேஸ் தான் தற்போது நடந்து வருகிறது. இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே வந்தபோதும், இவர்கள் ஆஜராகவில்லை, ஆனால் வேட்டையன் படத்துக்கு குடும்பத்தோடு போயி படம் பார்த்திருக்கிறார்கள்.

இன்று மீண்டும் வரவில்லை.. இதை தொடர்ந்து, ஜட்ஜ் கடுப்பாகி இருக்கிறார்கள். “அங்குட்டு போயி விளையாடுங்கா பா” என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள். மேலும் தற்போது, நவம்பர் 3 ஆம் தேதி, தள்ளி வைத்தனர். அன்றாவது வருவார்களா, இல்லை ரத்து செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஒன்றாக வீட்டுக்கு போவார்களா என்று இனி தான் பார்க்க வேண்டும்.

Trending News