Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

20 வருடமாய் இடியாப்ப சிக்கலாய் இழுத்த விவாகரத்து சண்டை.. தனுஷ்-ஐஸ்வர்யாவிடம் ரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை

20 வருடமாய் இடியாப்ப சிக்கலாய் இழுத்த விவாகரத்து சண்டை.. தனுஷ்-ஐஸ்வர்யாவிடம் ரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை

Actor Dhanush : சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது சாதாரண நடிகராக இருந்த தனுஷ் அதன் பின்பு அபாரமான வளர்ச்சியை அடைந்தார். […]

Actor Dhanush : சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது சாதாரண நடிகராக இருந்த தனுஷ் அதன் பின்பு அபாரமான வளர்ச்சியை அடைந்தார்.

இதற்கு காரணம் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்தும் ஒருபுறம் இருந்தது. அதோடு தனுஷ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பை போட்டு கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பட்டைய கிளப்பி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த விட்டதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா

மேலும் இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இரு குடும்பங்களும் ஈடுபட்ட போதும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா பிரச்சனையில் அவர்களின் இரண்டு மகன்களின் வாழ்க்கையை அழிச்சிடாதீங்க, என் நிம்மதி போயிடும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியிருக்கிறார்.

ஆனாலும் இப்போது விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். தங்களின் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இருவருமே தங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.

ஆகையால் இவர்களின் விவாகரத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இத்தனை நாள் எப்படியும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரஜினி குடும்பம் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.