சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பொண்டாட்டி காலில் விழுந்து சரண்டர் ஆகும் தனுஷ்.. இத அப்பவே யோசித்திருக்கலாம்

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் மனமொத்து பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது.

மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். இந்த விவாகரத்து அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது யார் என்று கேட்டால் அது நிச்சயம் தனுஷ் ஆகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால் ஐஸ்வர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள். இதனால் தொழில் சம்பந்தமாக பல நெருக்கடிகள் தனுஷுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதிலும் ரஜினிக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவரின் நெருக்கடி மற்றும் ரஜினி குடும்பத்தில் உள்ளவர்களும் தனுஷிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் அவர் வேறு வழி தெரியாமல் திணறி வருகிறார்.

அதோடு சினிமா சம்மந்தப்பட்ட பலரும் ரஜினியின் மகளை ஒதுக்கிய காரணத்தால் தனுஷ் இனிமேல் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விடும் என்ற கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்தனர். இது எல்லாம் சேர்ந்துதான் தனுஷை தற்போது யோசிக்க வைத்திருக்கிறது.

இதில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்காத தனுஷ் தற்போது மனைவியுடன் சமாதானமாகப் போய் விடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். இதற்காக அவர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவரோ எனக்கு இப்போதுதான் இரண்டாவது திருமணம் முடிந்து இருக்கிறது. அதனால் இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டாராம்.

இதனால் மனமுடைந்த தனுஷ் தற்போது அடுத்த கட்ட வேலையாக சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று அவர் தற்போது மனைவி காலை பிடிக்கவும் தயாராகிவிட்டாராம். கூடிய விரைவில் இந்த ஜோடி மீண்டும் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News