திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெற்றிமாறன் மீது செம கடுப்பில் இருக்கும் தனுஷ்.. பழசை மறக்க கூடாது நண்பா

தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை தனுஷை வைத்து எடுத்தார்.

அதிலும் ஆடுகளம், அசுரன் போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெற்று பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரின் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்பட்டது. அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தையும் இயக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அமீர் இயக்கத்தில் உருவாகும் இறைவன் மிகப்பெரியவன் உள்ளிட்ட சில படங்களுக்கும் திரைக்கதை எழுதுகிறார்.

இந்நிலையில் தான் அவருக்கு தனுஷிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தனுஷ் இப்போது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறார். இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கூட பறி போகும் அளவுக்கு இருக்கிறது. அதிலிருந்து வெளிவருவதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

மேலும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு வெற்றிப் படத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் தான் தனுஷ் அவருக்கு போன் செய்து இருக்கிறார். போனில் பேசிய வெற்றிமாறன், சார் நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன். விடுதலை, வாடிவாசல் போன்ற படங்களின் வேலைகளே எனக்கு சரியாக இருக்கிறது.

அதனால் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் கடுப்பான தனுஷ் நீங்கள் விஜய் சேதுபதி போன்ற ஆட்களை வைத்து படம் எடுக்கிறீர்கள் எங்கள் பக்கம் வருவீர்களா என்று குத்தலாக பேசியிருக்கிறார். தற்போது இந்த விஷயம் தான் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒருவகையில் வெற்றிமாறன் ஒரு முன்னணி இயக்குனராக மாறியதற்கு தனுஷும் ஒரு முக்கிய காரணம். இதனால்தான் அவர் வெற்றி மாறன் மீது தற்போது செம கோவத்தில் இருக்கிறார்.

Trending News