Dhanush: அஜித்தை பொருத்தவரை தன் நடிக்கும் படங்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, ரசிகர்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்று எந்தவித கவலையும் இல்லாமல் அவர் இஷ்டத்துக்கு நடித்து வருஷத்துக்கு ஒரு படத்தை கொடுக்கக் கூடியவர். அதனால் தான் சம்பளத்தை பற்றியும் பெருசாக யோசிக்காமல் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வார். அந்த வகையில் தற்போது அஜித் ஒரு படத்திற்காக கிட்டத்தட்ட 110 கோடி முதல் 125 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.
ஆனால் தற்போது இவருடைய ரேஞ்சுக்கு தானும் மாற வேண்டும் என்று தனுஷ் ஸ்கெட்ச் போட்டு விட்டார். ஏனென்றால் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஆறாவது இடத்தில் தனுஷ் இருக்கிறார். என்ன தான் ஹீரோக்களின் ரேஞ்ச் டாப்ல இருந்தாலும் அவர்கள் வாங்கும் சம்பளம் தான் அவர்களுடைய மார்க்கெட்டை தீர்மானிக்கிறது.
டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய தனுஷ்
அதனால் தற்போது படம் ஓடுகிறதோ இல்லையோ அதிகமான சம்பளம் வேண்டும் என்று அனைத்து ஹீரோக்களும் டிமாண்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அப்படித்தான் இங்கே தனுசும் இனி நடிக்க போற படத்திற்காக 50 நாள் மட்டும் தான் கால்ஷீட் கொடுப்பேன். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்று 50 நாளைக்கு 50 கோடி வேண்டும் என்று கரராக சொல்லிவிட்டார்.
இதுபோக ஷூட்டிங் அதிகரித்தால் அதற்கேற்ற சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் தீர்மானமாக இருக்கிறார். அப்படி என்றால் தனுஷ் போட்ட கணக்குப்படி ஒரு படத்தை நடித்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட நூறு கோடியை தொட்டு விடும் போல. ஏனென்றால் எந்த படமும் 50 நாளுக்குள் முடிக்கப் போவதில்லை. இதை தெரிந்து கொண்ட தனுஷ் ஒரு நாள் ஒரு கோடி என்று கணக்கு போட்டு தயாரிப்பாளர்கள் தலையில் முக்காடு போடும் அளவிற்கு வலை விரித்து விட்டார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் சரியாக மக்களிடம் ரீச் ஆகவில்லை. நானே வருவேன், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் கேப்டன் மில்லர் படத்திற்கு 20 கோடி மட்டும் தான் சம்பளத்தை பெற்றிருந்தார். ஆனால் அடுத்த படத்திலேயே இப்படி 50 கோடி வேண்டும் என்று டபுளாக டிமாண்ட் பண்ணியது தயாரிப்பாளர்கள் தலையில் இடியே போட்ட மாதிரி அமைந்துவிட்டது.
அதனால் இனி தனுஷ் கேட்கும் சம்பளத்திற்கு எந்த தயாரிப்பாளர்கள் ஓகே ஆகுகிறார்களோ, அவர்களிடம் தான் தனுஷ் கமிட்மென்ட் கொடுப்பார். அந்த வகையில் இப்போதைக்கு புதிதாக எந்த வாய்ப்பும் இவரை தேடி போவதாக தெரியவில்லை. ஏற்கனவே கமிட் ஆகிய ராயன், இளையராஜா பயோபிக் மற்றும் குபேரா படங்களில் நடித்து முடித்த பின்பு தான் இவருடைய மார்க்கெட் எந்த மாதிரி இருக்கும் என்று தீர்மானிக்க முடியும்.
சர்ச்சைக்குள் சிக்கித் தவிக்கும் தனுஷ்
- Dhanush: தனுஷோட அந்த சோகமான பாட்டுல வேலை பார்த்த 4 பேருக்கும் விவாகரத்து
- Dhanush: டிவிட்டர் பக்கம் போக முடில, அடித்து கொள்ளும் கமல்-ரஜினி பேன்ஸ்
- சுச்சி லீக்ஸ் ஒரு திருட்டு வேலை, அம்பலப்படுத்திய சுசித்ரா