அஜித்தை விட ஓவர் கறார் காட்டும் தனுஷ்.. பட்ட அடியால் கேப்டன் மில்லர் வைக்கும் செக்

Dhanush became strict: அஜித் 110 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். அதை அவர் சூட்டிங் வர வர கொஞ்சம் கொஞ்சமாக அதாவது மாத மாதம் 30 கோடிகள் என்ற கணக்கில் மாத சம்பளம் போல் வாங்கிக் கொள்வார். இப்படி வாங்குவதில் எப்பொழுதும் அவர் கரராக இருப்பார்.

சமீபத்தில் போனி கபூர் அஜித்தின் பாலிசிக்கு ஒத்துவராமல் சில விஷயங்களை செய்ததால் அவருக்கு படம் பண்ணுவதை நிறுத்திவிட்டார் ஏ கே. விடாமுயற்சி படத்திலும் லைக்கா அவருக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. இதனால் சம்பளம் வந்தால் ஷூட்டிங் வருவேன் என அஜித்தும் முரண்டு பிடித்துள்ளார்.

இதை போலத்தான் தனுஷின் நிலமையும் இப்பொழுது. சமீபத்தில் அவர் நடித்த படம் கேப்டன் மில்லர், அந்தப் படத்திற்கு கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேல் கால் சீட் கொடுத்து விட்டார். அப்படி நடித்துக் கொடுத்தும் சம்பளமும் சரியாக வரவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்து வந்தார் கேப்டன் மில்லர்.

பட்ட அடியால் கேப்டன் மில்லர் வைக்கும் செக்

இதனால் தனுஷ் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துவிட்டார். ஒரு படத்திற்கு 50 நாட்கள் மட்டும்தான் கால் சீட் கொடுப்பாராம். அந்த 50 நாட்களுக்கும் சம்பளமாக 50 கோடிகள் கொடுத்து விட வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற விகிதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இப்பொழுது தனுஷ் நடிக்கப் போகும் இளையராஜா பயோக் படம் மற்றும் நடித்துக் கொண்டிருக்கும் ராயன் படம் என எல்லாத்துக்கும் இந்த கணக்கில் தான் சம்பளம் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர்கள் எல்லோரும் இப்படி நாள் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் வடிவேலு நடிப்பதற்கு நாள் சம்பளமாகவும், நேரம் சம்பளமாகவும் பெற்று வந்தார். தற்போது பெரிய பெரிய நடிகர்கள் இதைத்தான் ஃபாலோ பண்ணுகிறார்கள். காமெடி நடிகர் யோகி பாபு கூட ஒரு நாள் நடித்துக் கொடுப்பதற்கு பத்து லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். தனுஷ் இப்பொழுது ஒரு நாளைக்கு ஒரு கோடி என சம்பள விஷயத்தில் காரர் காட்டி வருகிறார்.

Next Story

- Advertisement -