திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2025 வரை பிஸியாக இருக்கும் வாத்தி தனுஷ்.. அடுத்தடுத்த வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்

கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டியாக வெளுத்து வாங்கிய தனுஷின், சமீபத்திய கால தமிழ் படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் விட்டதை பிடிக்க வேண்டும் என வரிசையாக இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் 5 படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி படம், தெலுங்கு சார் என்ற டைட்டிலில் வெளியாகிறது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தனுஷின் வாத்தி படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கேப்டன் மில்லர்: தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்டபடப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை இப்படம் கொண்டுள்ளதாம். இப்படத்தின் சண்டை காட்சிகள் தென்காசியில் உள்ள வனப்பகுதியில் எடுக்கப்பட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read: கிரிக்கெட் வீரரை வைத்து சிவகார்த்திகேயன் எடுக்கும் புது அவதாரம்.. தனுஷுக்கு போட்டியாக போட்ட பக்கா பிளான்

சேகர் கமுலா-தனுஷ் கூட்டணி: தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 28 ஆம் தேதி பூஜையுடன் துவங்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் தயாராகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் இருக்கும் நிலையில், கூடிய விரைவில் இந்த படத்தையும் உருவாக்கி ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருக்கின்றனர்.

வடசென்னை 2: 2018 ஆம் ஆண்டு தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கினார் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து வடசென்னை 2 படத்திற்காக பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். விரைவில் வெற்றிமாறன் விடுதலை படப்பிடிப்பை முடித்துவிட்டு தனுஷின் வடசென்னை 2 படத்தை இயக்குவார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

Also Read: 3 கதைகளை வைத்துக்கொண்டு சுத்தும் ஹெச்.வினோத்.. தனுஷ் உடனே ஓகே சொல்லிய கதை

ஆயிரத்தில் ஒருவன் 2: செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் பண்டைய சோழர் மற்றும் பாண்டியர்களின் ராஜ்யத்தைப் பற்றி விவரித்தது. படத்தின் கதையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பல வருடங்களாக காத்திருக்கின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்திற்கான போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை மாற்ற பின் இந்த படத்தின்2ம் பாகத்தை விரைவில் எடுக்க வேண்டும் என்ற முடிவில் தனுஷ் இருக்கிறார். இதனால் இந்த படத்திற்கான கதையை செல்வராகவன் முன்பை விட மிகவும் கவனத்துடன் உருவாக்கி வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது.

Also Read: தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் நான்கு 2ம் பாகம் படங்கள்.. எதிர்பார்ப்பை எகிறவிட்ட வடசென்னை

இவ்வாறு இந்த 5 படங்களும் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது. இதனால் 2025 ஆம் ஆண்டு வரை பிஸியாக இருப்பதால் வேற எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இந்த 5 படங்களிலும் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தனுஷ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Trending News