புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விவாகரத்துக்கு பிறகு ஓஹோன்னு வரும் தனுஷ்.. எதிர்மறை விமர்சனங்களை தவிடுபொடியாக்கி சம்பவம்

தனுஷ் நடிப்பில் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. சமீப காலமாக பல்வேறு விதமான சிக்கலில் திக்கித் தவித்து வந்த தனுஷ் தற்போது அதிலிருந்து மொத்தமாக மீண்டும் வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை பகிரங்கமாக அறிவித்தார்.

இது சில அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் தனுஷ் வழக்கம்போல் தன்னுடைய வேலைகளை பார்த்து வந்தார். ஆனால் இனிமேல் அவருக்கு தமிழ் சினிமாவில் எந்தவிதமான வாய்ப்புகள் கிடைக்காது என்றும், அவருடைய மார்க்கெட் அவ்வளவுதான் என்றும் பல பேச்சுக்கள் எழுந்தது.

அதற்கு ஏற்றார் போல் தனுஷின் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. இதனால் தற்போது வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் தற்போது தனக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து விட்டாராம்.

அதாவது தனுஷ் தன்னுடைய ஒண்டர் பார் நிறுவனத்தின் மூலம் எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தயாரித்த காலா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவர் திரைப்படங்கள் தயாரிப்பதை தவிர்த்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் மாரி 2 திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதன் பிறகு மொத்தமாக இவருடைய நிறுவனத்தை மூடிவிட்டார். ஆனால் இப்போது அவர் தயாரிப்பின் மூலம் தனக்கு ஏற்பட்ட கடனை எல்லாம் அடைத்து விட்டாராம்.

அது மட்டுமல்லாமல் போயஸ் கார்டனில் பல கோடி மதிப்புக்கு புதிய வீடு ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கிறார். விரைவில் அதன் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிந்து குடியேறுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளாராம். மேலும் இப்போது அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மீண்டும் தொடங்கி விட்டாராம்.

நுங்கம்பாக்கத்தில் இருந்த அவருடைய ஆபீஸை தற்போது அவர் ஓஎம்ஆர் க்கு மாற்றி இருக்கிறார். கூடிய விரைவில் மூன்று திரைப்படங்களை தன்னுடைய தயாரிப்பில் தயாரிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் விவாகரத்துக்கு பிறகு தான் தனுஷுக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Trending News