ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வர்றதும் காதல், போறதும் காதல்.. வாரிசை ஹீரோவாக்கிய தனுஷ், படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா!

Dhanush D3: நடிகர் தனுஷுக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு படம் நடிக்கும் வேலையே பிஸியாக இருக்கிறது என சொல்லப்பட்டது. இந்த பிசிக்கு நடுவில் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி, நடித்து முடித்து இருக்கிறார். ராயன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் கைகோர்த்து இருந்தார். அதன் அப்டேட் வெளி வருவதற்குள்ளேயே தனுஷ் இன்னொரு படத்தை இயக்கப் போகிறார்.

பவர் பாண்டி என்னும் வித்தியாசமான கதைக்களத்தை இயக்கி, இயக்குனர் ராஜ்கிரனை மீண்டும் தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இருக்க வைத்தார். அட தனுசுக்கு டைரக்ஷனும் நல்லா வருதே என மக்கள் மனதார பாராட்டினார்கள். ராயன் படத்தை முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக எடுத்திருக்கும் தனுஷ், ஒரு அழகான காதல் கதையை இயக்கப் போகிறார்.

Also Read:தொட்டதெல்லாம் பொன்…! சின்ன மீனை போட்டு தனுஷ் பிடித்த 4 சுறாக்கள்

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருக்கிறது. தனுஷின் குரலில் வருவதும் காதல், போவதும் காதல் என்று ஒரு சின்ன கிளிப்பிங் வீடியோ ஆரம்பிக்கிறது. போவதும் காதல் என்ற வார்த்தையை தனுஷ் ரொம்ப அழுத்தமாக சொல்லும் போதே, அவருடைய காதல் வலியை அந்த குரலில் கண்டுபிடிக்க முடிகிறது. அந்த குரலில் ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டார்கள்.

வாரிசை ஹீரோவாக்கிய தனுஷ்

தனுஷ் இயக்குனராக மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளராக மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷ் உடைய அப்பா மற்றும் அம்மா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக அறிமுகமாக்குகிறார்.

என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். மேலும் நடிகர் சரத்குமாரும் இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தனுஷ் இயக்கும் தன்னுடைய மூன்றாவது படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என டைட்டில் வைத்திருக்கிறார்.

நடிகர் தனுஷின் குரலில் பாடலை கேட்க தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டமே உண்டு. பிபி ஸ்ரீனிவாசன் குரலில் கேட்ட நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற பாடலின் வரியை மோஷன் போஸ்டர் வெளியிட்ட வீடியோவில் தனுஷ் பாடியும் இருக்கிறார். இது இன்றைய கால காதலை அழகாக சொல்லும் கதை என்பது நன்றாக தெரிகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

Also Read:தலைவர் பிறந்தநாளில் தனுஷ் போட்ட ட்வீட்.. மாமனாரை விடாமல் தாஜா பண்ணும் மருமகன்

Trending News