வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

ஜாலியா வாங்க ஜாலியா போங்க.. தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

NEEK Trailer: தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது. பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர் என பல இளம் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதை தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

இதன் ஆரம்பத்திலேயே தனுஷ் இது ரொம்பவும் சாதாரண கதை தான் என கூறுகிறார். அதை தொடர்ந்து நாயகனின் காதல் பிரேக் அப் என விரிகிறது ட்ரெய்லர்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

ஹீரோ செஃப் ஆக இருக்கிறார். அவருடைய முன்னாள் காதலியாக அனிகா வேறு ஒரு திருமணத்திற்கு தயாராகிறார். ஹீரோவை பிரகாஷ் வாரியர் காதலிக்கிறார்.

இந்த இடியாப்ப சிக்கலில் யார் யாருடன் ஜோடி சேர்ந்தார்கள் என்பதுதான் கதை. அப்படித்தான் ட்ரைலர் கலகலப்பாகவும் சிறு குழப்பமாகவும் இருக்கிறது.

இதில் வழக்கமான கலாட்டா அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அனிகாவின் அப்பாவாக சரத்குமார் கதாபாத்திரங்கள் கவனம் ஈர்க்கிறது.

அதேபோல் ஜிவி பிரகாஷின் பின்னணி துள்ளல் இசை பெரும் பலமாக இருக்கிறது. இப்படி இன்றைய காலகட்ட காதல் பிரேக் அப் பற்றி சொல்ல வரும் இந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எந்த அளவுக்கு ஆடியன்ஸை கவரும் என பார்ப்போம்.

Trending News