திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தலைக்கு ஏரிய மம்மதை.. சூப்பர் ஹிட் கொடுத்த புகழ் போதையில் ஹெட் வெயிட் காட்டும் தனுஷ் பட இயக்குனர்

அதாவது இப்போது உள்ள பெரும்பாலான பிரபலங்களுக்கு ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டால் மம்மதை வந்து விடுகிறது. அவர்கள் கடந்து வந்த பாதையை சுத்தமாக மறந்து விடுகிறார்கள். அப்படிதான் தனுஷ் பட இயக்குனர் ஒருவர் நடந்து கொண்டது கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ஹிட் படம் கொடுக்க முடியுமா என்று திணறி வந்த அவருக்கு தயாரிப்பாளர் ஒருவர் வாய்ப்பு கொடுத்தார். மேலும் தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து தற்போது தலைகால் புரியாமல் இயக்குனர் ஆடி வருகிறாராம்.

Also Read : அடி உதவுவது போல் அண்ணன்.தம்பி உதவ மாட்டார்கள்.. விஜய்யை பார்த்து கூட திருந்தாத சிவகார்த்திகேயன், தனுஷ்

அதாவது சமீபத்தில் தனுஷுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் திருச்சிற்றம்பலம். சாதாரண கதையாக இருந்தாலும் இயக்கம் மற்றும் தனுஷ், நித்யா மேனன் நடிப்பினால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள். திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கியவர் மித்ரன் ஆர் ஜவகர்.

ஆரம்பத்தில் தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். ஒரு ஹிட் படத்திற்காக இவர் போராடி வந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் முதலில் படங்கள் இல்லாமல் மித்ரன் கஷ்டப்பட்ட வந்துள்ளார்.

Also Read : தனுஷ் வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற்ற 5 பிரபலங்கள்.. தரமான இயக்குனரை அறிமுகப்படுத்திய பொல்லாதவன்

நல்ல திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளாரே என தயாரிப்பாளர் ஒருவர் ஜவகருக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் தான் அரியவன். இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் இஷான், பிரனாலி கோக்ரே, டேனியல் பாலாஜி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு கவரவில்லை. இதனால் மித்ரன் தற்போது இந்த படத்தை நான் இயக்கவே இல்லை என்று கூறியுள்ளார். என்னுடைய அசிஸ்டன்ட் தான் இந்த படத்தை எடுத்தார் என மழுப்பி வருகிறார். இந்த படத்தால் அவருடைய பெயர் கெட்டுவிடுமோ என்று இவ்வாறு செய்து வருகிறாராம்.

Also Read : தனுஷ், சிவகார்த்திகேயனின் ஆணிவேரை பிடுங்கிய சிம்பு.. இனி எல்லாமே பத்து தல ஆட்டம் தான்

Trending News