சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எனக்கு யாரும் வேண்டாம்.. இவர் மட்டும் போதும் என அதிரடி முடிவு எடுத்த தனுஷ்

நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மாதம் மனமொத்து பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த ஐஸ்வர்யா, தனுஷ் இருவரின் பிரிவு அவர்களது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஐஸ்வர்யா, தனுஷ் இருவரையும் இணைக்க இரு குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ளாமல் யாரோ போல் நடந்து கொண்டார்களாம்.

இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய பட வேலையில் பிஸியாக உள்ளார். அதேபோல் தனுஷும் கவலையை மறக்க தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு செல்லும்போதும் யாரிடமும் பேசாமல் தன் வேலை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவாராம். தனுஷ் ஹாலிவுட், பாலிவுட் என சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை தொட்டாலும் சொந்த வாழ்க்கையால் மிகுந்த மன கஷ்டத்தில் உள்ளார்.

இந்நிலையில் சிவபக்தனாக இருக்கும் தனுஷ், தன்னுடைய கவலை நீங்க சமீபகாலமாக தொடர்ந்து சிவன் கோயிலுக்கு சென்று தன் மனக் கவலைகளை கூறி வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகிறது.

கடவுளிடம் சொன்னால் கொஞ்சமாவது மனக்கவலை குறையும் என்பதற்காக கோவிலுக்கு செல்கிறாரோ என்னவோ. ஏண்டாப்பா ஒரு மனுஷன் கோயிலுக்கு போனா தப்பா, தனுஷ் இப்போது இல்லை எப்போதுமே சிவபக்தன் நான் என்பது ஊருக்கே தெரியும்.

Trending News