ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

3-வது முறையாக இணையும் கூட்டணி.. அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் பட இயக்குனர்

கடந்த ஆண்டு தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் என்கின்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கும் அடுத்த பட அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மித்ரன் ஆர் ஜவகர் 2008 ஆம் ஆண்டு தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு தனுஷின் வைத்து குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களையும் இயக்கினார். இதை அடுத்து சில ஆண்டுகள் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த மித்ரன் ஆர் ஜஹவர் 12 வருடங்கள் கழித்து தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

Also Read: அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருப்பார்கள். சிம்பிளான கதை அம்சத்துடன் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அதிரடி காதல் திரைப்படம் ஆக திருச்சிற்றம்பலம் இருந்தது.

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜஹவர் மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக செய்திகள் வெளியானது.

Also Read: தனுஷ் இனிமேல் அக்கட தேசத்தில் படம் வெளியிடுவது சந்தேகம்.. வாத்தி பட பிரமோஷனில் ஏற்பட்ட சர்ச்சையான பேச்சு

ஆனால் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்த படத்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மித்ரன் ஆர் ஜவகர் வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகர் மாதவன் நடிக்கும் புதிய படத்தை தான் மித்ரன் ஆர் ஜவகர் இயக்க உள்ளார். இந்தப் படத்தை மீடியோ ஒன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே மாதவன் நடித்த மின்னலே, தம்பி போன்ற படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. எனவே மூன்றாவது முறையாக மாதவனின் படத்தை இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: காதல் கணவருக்கு ஏற்பட்ட அவமானம்.. நயன்தாரா எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்

Trending News