நடிகர் தனுஷின் பெரும்பாலான படங்களில் தனது மாமனார் ரஜினியின் சாயல் அதிகமாக இருக்கும். ரஜினியின் பழைய பட டைட்டில்களையே தனுஷ் தன்னுடைய படங்களிலும் வைத்து வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு இருக்க சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர்.
அப்போது தனுஷின் வளர்ச்சிக்கு ரஜினி தான் முக்கிய காரணம் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் அதை மறுத்த தனுஷ் என்னை வளர்த்து விட்டார்கள் என் அப்பா மற்றும் அண்ணன் மட்டும்தான். அதன் பிறகு என்னுடைய திறமையால் மட்டுமே நான் இந்த உயரத்திற்கு வந்தேன் என கூறியிருந்தார்.
தற்போது தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி பின் தனுஷ், செல்வராகவன் இணைகிறார்கள். நானே வருவேன் படம் வெளியாவதில் தொடர்ந்து பெரிய சிக்கல் நிலவி வருகிறது.
ஆரம்பத்திலிருந்து இப்படத்தில் அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நானே வருவேன் படத்தின் போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில் தனுஷ் ஸ்டைலாக அமர்ந்து கொண்டு வாயில் சிகரெட்டை வைத்து ஸ்டைலாக புகை ஊதித் தள்ளுகிறார். ஆனால் ரஜினி அண்ணாமலை படத்திலேயே இப்படி சிகரெட்டை பிடித்துக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்து இருப்பார். அதைதான் தனுஷூம் இப்போது நானே வருவேன் படத்தில் காப்பியடித்து உள்ளார் என கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அண்ணாமலை படத்தின் கதை தான் நானே வருவேன் படத்தின் கதை என கூறி வருகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க சிலர் என்னதான் தனுஷ், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய நினைத்தாலும் தனது மாமனார் ரஜினியை மறக்காமல் அவரை எடுத்துக்காட்டாக நினைத்து பின்பற்றுகிறார் என கூறி வருகின்றனர்.