தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா படங்களில் எழுத்தாளராக அறிமுகமான இயக்குனர் செல்வராகவன், அதன்பிறகு கதை இல்லாமல் கூட படம் எடுப்பார் ஆனால் தன்னுடைய தம்பி தனுஷ் இல்லாமல் படம் எடுக்க கொஞ்சம்கூட யோசிக்க மாட்டார். இப்படி தான் இவர் தன்னுடைய தம்பி சுள்ளானை மாரி ரேஞ்ச்க்கு மாற்றியிருக்கிறார்.
துள்ளுவதோ இளமை: 2002ல் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படத்தை செல்வராகவன் திரைக்கதை எழுதி தந்தையுடன் இணைந்து இயக்கி இருப்பார். நடிகை ஷெரின் கதாநாயகியாக நடித்திருப்பார். இதில் சமூகத்தில் வெவ்வேறு நிலையில் இருக்கும் 3 சிறுவர்கள் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட ஆறு பேரும் பள்ளியில் உயர்நிலை வகுப்பில் தோழர்களாக மாறுகின்றனர். ஒவ்வொருவரும் அவர்களது குடும்பங்களில் சந்திக்கும் பிரச்சனை, அதனால் படிப்பு பாதிக்கப்படுவதால் வீட்டை விட்டு வெளியேறி அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்வது தான் இந்த படத்தின் கதை. இதில் பள்ளி மாணவனாக தனுஷ் தனது இயல்பான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.
காதல் கொண்டேன்: 2003ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கொண்டேன் படம்தான் தனுசை நன்கு நடிக்கக் கூடியவர் என வெளி உலகத்திற்கு காட்டி அவருடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதில் தனுஷ் அனாதையான கல்லூரி மாணவராக நடித்திருப்பார். இதில் கதாநாயகியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார்.
இவ்வாறு கல்லூரியில் பெரும்பாலான மாணவர்களால் புறக்கணிக்கப்படும் தனுசை, கதாநாயகி அரவணைக்க அவளுடைய அன்பை, காதல் என தவறாக புரிந்து கொண்டு ஒரு தலையாக காதலித்து அந்த காதல் தனக்கு கிடைக்காத போது சைக்கோவாக மாறி அந்த காதலியை வெறித்தனமாக காட்டிற்குள் அடைத்து வைக்கிறான். அதன் பிறகு கதாநாயகி காதலிக்கும் காதலன் அந்த இடத்திலிருந்து அவளை மீட்டு செல்லும்போது, அந்தக் காதலும் தனுஷும் படுகுழியில் மாட்டிக்கொண்டு இருவரது கையையும் இழுத்துப் பிடித்து காப்பாற்றும் நிலையில் கதாநாயகி இருப்பாள். இருவரையும் விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக அவள் நினைத்ததால், அவள் மனதில் நாம் இருக்கிறோம் என்ற மனநிறைவுடன் தனுஷ் கதாநாயகியின் கையை விட்டு விட்டு குழியில் விழுந்து இறந்து விடுவான். அவனுடைய இறப்பு கதாநாயகியை வெகுவாக பாதிக்கும்.
திருடா திருடி: சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் தனுஷ், சாயா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2003ஆம் ஆண்டு வெளியான திருடா திருடி படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி தான் இந்த படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்ய வைத்தது. இதில் தனுஷ்-சாயா சிங் இருவரும் எலியும் பூனையுமாக படம் முழுவதும் சண்டை போட்டுக் கொண்டாலும், தனுஷ் வேறொரு பெண்ணுடன் பேசி பழகும்போது பொறாமை ஏற்பட்டு தனுஷிடம் இருக்கும் காதலை சாயாசிங் வெளிப்படுத்துவாள். ஆனால் தனுஷ் அதை ஏற்காமல் அவளை அந்த நேரத்திலும் கிண்டல் கேலி செய்து சண்டக்கோழி ஆகவே படம் முழுவதும் காதலை வேறு விதத்தில் வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘மன்மதராசா’ பாடல் அந்த சமயத்தில் டிவியில் அடிக்கடி ரிப்பீட் மோடில் போடப்பட்ட பாடலாக பட்டிதொட்டியெங்கும் ஒலித்து தனுஷின் மேலும் பிரபலப்படுத்தியது.
திருவிளையாடல் ஆரம்பம்: பூபதி பாண்டியன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமான திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருப்பார். இந்தப் படம் வியாபார ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று தனுஷின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. இந்தப் படத்தில் தனுஷ் தன்னுடைய காதலையே காதலியின் அப்பாவிடம் அடமானம் வைத்து பணம் வாங்கி அதை வைத்தே தொழிலதிபராக மாறி பின் தனது காதலியை கரம் பிடிப்பார். இப்படி திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் காதலியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் இடம் தனுஷ் அடிக்கும் லூட்டி படத்துடைய வெற்றியாக அமைந்தது. இந்தப்படமும் 2007-இல் தெலுங்கிலும், 2011-இல் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
புதுப்பேட்டை: செல்வராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றுத் தந்த இந்த படத்தில், சிறுவயதிலேயே ரவுடி கும்பலிடம் சிக்கிக்கொண்ட தனுஷ், விரைவில் தன்னுடைய முதலாளியின் வலது கையாக மாறி ஆபத்தான எதிரிகளை உருவாக்குகிறான். பிறகு தனுஷ் அரசியல்வாதியாக மாறி அதன் பிறகு ரௌடி என்ற தன்னுடைய முகத்தை அரசியல்வாதியாக மாற்றி, ரவுடிகள் அரசியலை பயன்படுத்திக் கொள்ளும் நிலையை இந்த படத்தின் மூலம் இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்.
பொல்லாதவன்: பைசைக்கிள் தீவ்ஸ்(Bicycle Thieves) என்ற இத்தாலி திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட பொல்லாதவன் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க தனுஷ், திவ்யா ஸ்பந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வாலிபன் தன்னுடைய பைக்கை உயிரென நினைத்து கொண்டிருக்கும் போது, அதை ரவுடி கும்பல் ஒன்று திருடி விற்றது தெரியவர அந்த பைக்கை மீட்டெடுத்து தன்னுடைய வாழ்க்கையில் ரவுடிகளால் வரும் பிரச்சனையை எப்படி தனுஷ் சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படம்.