தனுஷின் இட்லி வேகுரதுக்குள்ள பற்றி எரிந்த வியாபாரம்.. அஜித், ரஜினியால் மட்டுமே வந்த ஆபத்து

தனுஷ் இயக்கிக் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தின் சூட்டிங் முழுவதுமாய் முடிந்துவிட்டது. மதுரை, சென்னை, வெளிநாடுகள் என அனைத்து இடங்களிலும் இதை படமாக்கினார் தனுஷ். இந்த படத்தை ஆரம்பத்தில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடலாம் என திட்டம் போட்டு வந்தனர் படக் குழுவினர்.

படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 10ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதனால் இந்த படம் அந்த தேதியில் இருந்து பின்வாங்கியது. இட்லி கடை மொத்தமாய் டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரம் ஆனபோதிலும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை.

தனுஷ் நடிப்பில் குபேரா படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது, அதனால் இட்லி கடை படம் அந்த மாதத்தில் இருந்தும் தள்ளிப் போய் உள்ளது. அதுவும் போக மே மாதத்தில் ரஜினியின் கூலி படம் ரிலீசாகும் என அறிவித்திருந்தனர். இதனாலும் தனுஷ், இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை கொஞ்சம் தள்ளிப் போட்டுள்ளார்.

ஆரம்பத்திலேயே இந்த படத்திற்கு நல்ல டேபிள் profit கிடைத்துள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமைகளை மட்டும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் சுமார் 45 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. இது மற்ற படங்களின் வியாபாரத்தை காட்டிலும் நல்ல ஒரு லாபகரமான தொகை. தற்போது டிஜிட்டல் வீழ்ச்சி அடைந்தும் கூட இந்த படம் நல்ல விலைக்கு போய் உள்ளது.

இதற்கு முன்னர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தை 50 கோடிகள் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியது. சமீப காலமாக OTT இல் வெளியாகும் எந்த படமும் நல்ல லாபகரமாக அமைவதில்லை என பல பெரிய நிறுவனங்கள் அடி மாட்டு விலைக்குத்தான் படங்களை வாங்குகிறார்கள். அப்படி இருக்கையில் தனுஷ் படங்கள் நல்ல வியாபாரமாகி வருகிறது.

Leave a Comment