Dhanush-Idly kadai: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துவரும் இட்லி கடை ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்தது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக பட குழு இருந்தது.

அதே சமயம் அஜித்தின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிச்சயம் இட்லி கடை அதே தேதியில் வெளியாகாது என அஜித் ரசிகர்கள் கூறிவந்தனர்.
அதற்கேற்றார் போல் தயாரிப்பாளரும் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அதனால் ரிலீஸ் தாமதமாகும். விரைவில் தேதியை அறிவிப்போம் என கூறியிருந்தார்.
இது போதாதா உடனே அஜித் ரசிகர்கள் தனுஷ் பயந்து பின்வாங்கி விட்டதாக சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்தனர். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை.
மாதக்கணக்கில் காக்க வைக்கும் தனுஷ்
ஹிந்தி பட ஷூட்டிங்கிற்காக மும்பை பறந்து விட்டார். இந்நிலையில் இன்று இட்லி கடை அப்டேட் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து தற்போது படம் அக்டோபர் 1ம் தேதி உலக அளவில் வெளியாகும் என போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனாலும் இத்தனை மாதங்கள் தள்ளிப் போவது ஏன்? அப்படி என்னதான் படம் இருக்கிறீர்கள்? என்ற கமெண்ட்களும் வரத் தவறவில்லை.
ஒருவேளை அடுத்தடுத்து பெரிய படங்கள் வருவதால் இந்த இடைவெளியாக கூட இருக்கலாம். எது எப்படியோ அக்டோபர் மாதம் தனுஷ் ரசிகர்களுக்கு திருவிழா தான்.