வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலர் பட நடிகரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய தனுஷ்.. மாமனாரை பழிவாங்க இப்படியும் செய்யலாம்.!

Rajinikanth – Dhanush: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பினை பெற்று, கோடிக்கணக்கில் வசூலையும் குவித்து வருகிறது. இந்த படத்தில் ரஜினி மட்டும் இல்லாமல் அவருடன் நடித்த நிறைய கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இதில் முக்கியமான ஒருவர்தான் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.

நடிகர் சிவராஜ் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு அந்த நட்பு தான் காரணம். நெல்சன் அவருக்கு சரியான கேரக்டர் கொடுத்திருப்பதால் தான் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றார். தற்போது சிவராஜ் குமாருக்கு என்று தமிழ்நாட்டில் ரசிகர்களும் அதிகமாகி விட்டார்கள்.

Also Read:முதல் முதலாக இன்டர்வல் பிளாக் கொண்டு வந்த படம்.. ஜெயிலர் படத்தை மிஞ்சிய இடைவேளை

இதனாலேயே அவர் அடுத்த நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் ஜெயிலர் படத்தின் அனுபவத்தை போல், சிவராஜ் குமாருக்கு கேப்டன் மில்லர் படப்பிடிப்பின் போது சிறப்பாக எதுவுமே அமையவில்லை. எதற்காக இந்த படத்தில் ஒப்புக்கொண்டோம் என அவரே யோசிக்கும் அளவுக்கு தனுஷ் அவரை நடத்தியிருக்கிறார்.

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளத்திற்கு சிவராஜ்குமார் சரியான நேரத்திற்கு முன்பே வந்து விடுவாராம். ஆனால் தனுஷ் படப்பிடிப்பிற்கு ரொம்பவும் லேட் ஆகத்தான் வருவாராம். அதிலும் வெறும் 15 நிமிடங்களில் நடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பி விடுவாராம். அந்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை மரியாதைக்குக் கூட கண்டுகொள்ள மாட்டாராம்.

Also Read:30 ஆயிரம் சம்பளத்தில் இருந்து 5 மடங்கு ரஜினியை உயர்த்திய படம்.. வியாபாரத்தை கற்றுக்கொடுத்த முதலாளி

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் இப்படித்தான் தொடர்ந்து நடந்திருக்கிறது. சிவராஜ் குமார் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்து முடித்து கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவே இனி வேண்டாம், தமிழ் ஹீரோக்கள் இனி இப்படித்தான் இருப்பார்கள் என்று அவர் நினைக்கும் அளவிற்கு இந்த படப்பிடிப்பு சம்பவம் கசப்பாக அமைந்திருக்கிறது.

இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நெருங்கிய நண்பர் என்று தெரிந்திருந்தும் தனுஷ் இப்படி செய்திருப்பது தன்னுடைய முன்னாள் மாமனாரை பழி வாங்குவதற்கு தான் என்பது போல் தற்போது பேசப்படுகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரஜினி கூட இப்படி படப்பிடிப்பு தளத்திற்கு லேட்டாக வருவது, சக கலைஞர்களை மதிக்காமல் நடந்து கொள்வது என செய்ததில்லை.

Also Read:ரஜினி எல்லாம் பேச உனக்கு தகுதி இருக்கா.? அக்கட தேசத்து நடிகருடன் சண்டை செய்து பதிலடி கொடுத்த பயில்வான்

Trending News