திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

தனுஷ் நடிக்க ஆசைப்பட்ட கதை.. சுயநலமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கிய மணிரத்னம் அதன் முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இன்னிலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற சரித்திர நாவலை படமாக்கும் முயற்சியில் உள்ளனர்.

இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே தனுஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு முயற்சித்தார். ஆனால் அதன் பிறகு கொரோனோ பரவலின் காரணமாக கைவிடப்பட்டது. பின்  வேள்பாரி நாவலை திரைப்படமாக்க சங்கர் தற்போது தீவிர முயற்சியில் உள்ளார்.

Also Read: பொன்னியின் செல்வனில் நயன்தாரா குரலா? நந்தினியின் கம்பீரக் குரல் இவருடையதுதான்

அதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மதுரையில் நடைபெற்ற விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எழுத்தாளர் சு வெங்கடேசன் மற்றும் சூர்யா இருவரும் கலந்து கொண்ட போது உறுதிசெய்யப்பட்டது.

அப்போது பேசிய சூர்யா ‘வேள்பாரி’,  ‘காவல் கோட்டம்’ போன்ற நாவலின் கதை தமிழர்களின் முக்கிய அடையாளமாக உள்ளது. மிகச் சிறந்த படைப்பான வேள்பாரி நாவல்களை படமாக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். சீக்கிரம் இதுபற்றி சொல்கிறோம். இது ஒரு முக்கிய பதிவாகவும் பயணமாகவும் இருக்கும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் சூர்யா தெரிவித்திருந்தார்.

Also Read: 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்.. வெங்கடேசன் நாவலை கையில் எடுக்கும் ஷங்கர்

சு வெங்கடேசன் எழுதி சாகித்திய அகாடமி விருது பெற்ற காவல் கோட்டம் ஏற்கனவே வசந்தபாலன் இயக்கத்தில் அரவான் என்ற படமாக 2012 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது அவர் எழுதிய வேள்பாரி நாவலும் சூர்யா நடிப்பில் விரைவில் உருவாகப் போகிறது.

மேலும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவும் ஒரு சரித்திரப் படமாக உருவாகி கொண்டிருக்கிறது. வேள்பாரி திரைப்படத்திற்கு முன்னதாக தனது 42-வது படத்தை ஒரு சோதனை படமாக சூர்யா நடிக்க திட்டமிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பும் ஆவலும் இருக்கிறதோ, அதேபோன்று வேள்பாரி படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Also Read: பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு வராத ஒரே பிரபலம்.. பழிக்கு பழிதீர்த்த மணிரத்தினம்

Trending News