திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செல்வராகவனை எச்சரித்த தம்பி.. ஸ்டேட்டஸை காப்பாற்ற நினைக்கும் தனுஷ்

செல்வராகவன் இயக்கிய படங்கள் எல்லாம் ஆரம்ப காலத்தில் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் சில வருடங்களாகவே அவரின் படங்கள் எல்லாமே வெற்றியடையாமல் தோல்வி மட்டுமே பார்த்து வருகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனக்குழப்பத்தில் இருந்தபோது தனுசை தேடிச் சென்று இருக்கிறார். அப்பொழுது அவரை அறிமுகப்படுத்திய அண்ணாவிற்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

செல்வராகவன் இயக்கி தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் நானே வருவேன். ஆனால் இந்த படம் இவர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையாமல் போய்விட்டது. இதற்கு காரணம் மக்களுக்கு மிகவும் பழகிப்போன சைக்கோ கில்லர் கதை தான். மேலும் கொஞ்ச காலமாக தனுசுக்கும் எந்த படமும் வெற்றி படமாக அமையவில்லை.

Also read: 4 டாப் ஹீரோக்களுடன் இயக்கிய நடிக்கப் போகும் தனுஷ்.. மரண மாஸாக வெளிவந்த அடுத்த பட டைட்டில்

இதன் காரணமாக தனுசும் இவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார். இதற்கிடையில் செல்வராகவன் தன்னால் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை என்று நினைத்து திணறி வருகிறார். பின்னர் இவருக்கு மிகவும் பணம் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அடுத்த முயற்சியாக இவர் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அதிலும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் விரக்தியில் இவர் சில பதிவுகளை இணையதளத்தில் போட்டு வந்தார். இவரின் பதிவுகள் அவரின் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இவர் போட்ட பதிவினால் தேவையில்லாமல் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார் தனுஷ். இதனை தொடர்ந்து இவர் நிலைமைக்கு காரணம் ஒருவிதத்தில் தனுஷ் தான் என்று பேசப்பட்டு வருகிறது.

Also read: மனைவியால் நொந்துபோனரா செல்வராகவன்? சர்ச்சைக்குள்ளான பதிவிற்கு இதுதான் காரணம்.!

ஏனென்றால் தனுஷ் தற்போது இவரை கண்டு கொள்வதும் இல்லை பண உதவிகளும் செய்வது இல்லை என்பதால் இவர் விரக்தியில் புலம்புகிறார் என பலரும் பேசி வருகின்றனர். இதனை பார்த்து கடுப்பான தனுஷ் செல்வராகவனை சந்தித்து சமாதானப்படுத்தும் விதமாக கூடிய விரைவில் நாம் இருவரும் சேர்ந்து ஒரு வெற்றி படத்தை கொடுக்கலாம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

மேலும் இனிமேல் இது சம்பந்தமாக தேவையில்லாத பதிவுகளையும் போட வேண்டாம் என எச்சரித்தும் வந்துள்ளார். இது அவருடைய ஸ்டேட்டஸை காப்பாற்றுவதற்காக தான் இந்த மாதிரி வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இவருக்கு மற்றபடி அண்ணன் மேல பெரிய அளவில் பாசத்தினாலே இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also read: 2025 வரை பிஸியாக இருக்கும் வாத்தி தனுஷ்.. அடுத்தடுத்த வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்

Trending News