புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சார்பட்டா 2-வை ஓரங்கட்ட வரும் தனுஷ்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் வெற்றி கூட்டணி

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. வடசென்னையின் இரு சார்பினருக்கிடையே இருக்கும் பிரச்சனை மற்றும் குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் தற்போது ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

தற்போது இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இப்படி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளிவந்திருக்கும் இந்த செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்திருக்கிறது. மேலும் கபிலனின் அடுத்த ஆட்டத்தை காணவும் அவர்கள் காத்திருக்கின்றனர்.

Also read: பாலிவுட் முதல் டோலிவுட் வரை 100 கோடி வசூலித்த தனுஷ்.. பான் இந்தியா பயத்தை காட்டிய கேப்டன் மில்லர்

இந்நிலையில் இதற்கு போட்டியாக தனுஷின் வடசென்னை 2 திரைப்படமும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் பல வருடங்களாக கேட்டுக் கொண்டே இருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தனுஷ் வாத்தி திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் போது நாசுக்காக ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதாவது கண்டிப்பாக வட சென்னை 2 வெளிவரும் என்றும் வெற்றிமாறன் தயார் என்றால் நானும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படத்திற்கான வேலைகள் சீக்ரெட்டாக நடைபெற்று வருகிறதாம்.

Also read: ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தலைவர்-170 அறிக்கை

விடுதலை திரைப்படத்தில் பிஸியாக இருந்த வெற்றிமாறன் தற்போது ஒரு வழியாக அதன் ஷூட்டிங்கை முடித்து விட்டார். அதை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படம் ஆரம்பிக்கப்படும் என்று நினைத்த வேலையில் அதற்கு சில காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை பார்க்க இருக்கிறாராம்.

அந்த வகையில் சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கு போட்டியாக வடசென்னை 2 களமிறங்க உள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளி வருவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் பல ஹிட் படங்களை கொடுத்த தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி தற்போது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி இருப்பதும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Also read: மேட்ச் பாக்க ரெடியா? 2 வது ரவுண்டுக்கு தயாரான ஆர்யாவின் வைரல் போஸ்டர்

Trending News