வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் மானத்தை வாங்கிய ரசிகர்.. கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வைத்த தொகுப்பாளினி

Captain Miller: தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இரண்டு வேடத்தில் அவர் நடித்துள்ள நிலையில் இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இந்த படத்தின் நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் கேப்டன் மில்லர் படக்குழு மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தனுஷை பார்க்க ரசிகர்கள் கூடிய போது அங்கு அருகில் இருந்தால் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி மீது தனுஷ் ரசிகர் அத்துமீறி இருக்கிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் சரக்கு படவிழாவில் கூல் சுரேஷ் ஐஸ்வர்யா மீது மாலை அனுவித்தார்.

அப்போது வேறு வழி இல்லாமல் அமைதி காத்த ஐஸ்வர்யா அதன் பிறகு கூல் சுரேஷை விமர்சித்து ஒரு பதிவு போட்டிருந்தார். இதை அடுத்து கூல் சுரேஷ் அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த இடத்திலேயே கூல் சுரேஷை அறைந்திருப்பேன் என்றும் அப்போது ஐஸ்வர்யா கூறியிருந்தார்.

Also Read : தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஆப்பு.. வசூலில் விழப்போகும் பெருத்த அடி

இந்நிலையில் கேப்டன் மில்லர் விழாவில் தன்னை அத்துமீறிய வரை அடையாளம் கண்ட ஐஸ்வர்யா அதே இடத்தில் அவருக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் மிகவும் துணிச்சலான ஐஸ்வர்யா இவ்வாறு செய்துள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் பொது இடங்களில் பெண்களிடம் இவ்வாறு அத்துமீறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக கண்டிப்பாக அமையும். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆண்கள் இதுபோன்று செய்ய பயப்படுவார்கள். ஆனாலும் கேப்டன் மில்லர் விழாவில் இவ்வாறு நடந்துள்ளது தனுசுக்கு சங்கடமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

ஐஸ்வர்யா ரகுபதி

aishwarya-ragupathi
aishwarya-ragupathi
aishwarya
aishwarya

Also Read : அடுத்த வருடம் ஆக்ஷன் படமாக களமிறங்க போகும் 5 படங்கள்.. கீரியும் பாம்புமாக நிற்கப்போகும் சிம்பு தனுஷ்

Trending News