வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இளையராஜா பயோபிக் இப்போதைக்கு இல்ல.. ரொம்ப நூல் பிடித்து பார்க்கும் தனுஷ்

Dhanush : தனுஷ் இப்போது நிக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு படு பிஸியாக இருந்து வருகிறார். தன்னுடைய 50வது படத்தை அவரே இயக்கிய நிலையில் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ராயன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

அதுவும் எஸ்ஜே சூர்யாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் இருக்கிறது. இந்நிலையில் சுதா கொங்கரா தனது கனவு படமான புறநானூறு படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

ஆனால் இப்போது தனுஷ் மிகவும் பிசியாக இருப்பதால் இரண்டு வருடம் மட்டும் காத்திருங்கள் நான் இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். சுதா கொங்கரா உடனடியாக இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக வேறு நடிகரை தேர்வு செய்துள்ளார்.

இளையராஜா பயோபிக்கால் மன கஷ்டத்தில் இருக்கும் தனுஷ்

புறநானூறு போல தனுஷின் அடுத்த கனவு படம் தான் இளையராஜாவின் பயோபிக். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் என்ற படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இப்போது முதல் பார்ட் எடுக்க தனுஷ் இழுத்துக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் இளையராஜா மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதால் சென்னை வந்த பிறகுதான் ஃபர்ஸ்ட் பார்ட் தொடங்க இருக்கிறார்கள். தனுஷ் தனது கால்ஷீட்டில் ரொம்ப இழுத்து பிடித்தாலும் இப்போதைக்கு எதுவும் வேலைக்கு ஆகவில்லையாம்.

இளையராஜா பயோபிக் தாமதமானால் தனுஷின் அடுத்தடுத்த படங்களும் தாமதமாக வாய்ப்பிருக்கிறது. இந்த படத்தால் புறநானூறு படத்தையும் தனுஷ் இப்போது தவற விட்டுவிட்டார். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்கிறாராம்.

ராயனாக மாஸ் காட்டபோகும் தனுஷ்

Trending News