புதன்கிழமை, ஜனவரி 8, 2025

தனுஷின் மாறன் ரசிகர்களை கவர்ந்ததா.? ட்விட்டரில் வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கும் திரைப்படம் மாறன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ராம்கி, ஆடுகளம் நரேன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியான இப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தான் படத்தை இயக்கினாரா என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

maaran-review
maaran-review

படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட், சஸ்பென்ஸ், திரில்லர் என்று இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும் தனுஷ் ஒருவரே மொத்த படத்தையும் தாங்கி விடுகிறார். உண்மையை கண்டு பிடிக்க போராடும் ஒரு பத்திரிக்கையாளராக அவருடைய நடிப்பு வழக்கம்போல பிரமாதமாக இருக்கிறது.

maaran-review
maaran-review

முதல் பாதி முழுவதும் சென்டிமென்ட், கலகலப்பு என இருந்தாலும் இரண்டாம் பாதியில் கதை சற்றே மெதுவாக நகர்கிறது. மேலும் பல காட்சிகளும் அனைவரும் கணிக்கும் படி இருப்பதாக படத்தை பார்த்த பலரும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

maaran
maaran

மேலும் ஸ்மிருதி வெங்கட் அளவுக்கு ஹீரோயின் மாளவிகா மோகனுக்கு படத்தில் அந்த அளவிற்கு வேலை இல்லை. இதனால்தான் டைரக்டர் பல காட்சிகளில் அவரை பபுள்கம் மெல்லுவது போல் காட்டி விட்டார் என்று ரசிகர்கள் அவரை கலாய்க்கின்றனர்.

maaran
maaran

அசுரன் போன்ற படங்களில் நடித்து நம்மை மிரள வைத்த தனுஷுக்கு இந்த படம் கொஞ்சமும் பொருத்தமில்லை என்று சோசியல் மீடியாவில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் வைரலாகி வருகிறது. இருப்பினும் படம் சுத்த மோசம் என்று சொல்வதற்கு இல்லாமல் ஒரு முறை பார்க்கும் படியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

maaran
maaran
maaran
maaran

Trending News