வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

23 வயது இளம் வீரருடன் டேட் செய்யும் தனுஷ் பட நடிகை.. அப்பா 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது

தற்போது சினிமாவில் பிரபலமாக இருக்கும் இளம் நடிகைகள் பலரும் சக நடிகர்கள் அல்லது பிரபல செலிபிரிட்டிகளுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தனுஷ் பட ஹீரோயின் ஒருவர் பிரபல கிரிக்கெட் வீரருடன் நெருக்கமாக பழகி வருகிறாராம்.

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று பிரபலமாக இருக்கும் தனுஷ் ஹிந்தியில் சமீபத்தில் அத்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் சாரா அலிகான். பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மகள் தான் இவர். அப்பாவை பின்பற்றி இவரும் தற்போது ஹீரோயினாக பாலிவுட்டில் பிரபலமாகி இருக்கிறார்.

Also read : நானே வருவேன் படத்தை கண்டிப்பாக பார்க்க 5 காரணங்கள்.. தனுஷ் செய்யப் போகும் சம்பவம்

தற்போது இவர் பிரபல கிரிக்கெட் வீரர் சுமன் கில்லுடன் நெருக்கமாக பழகி வருகிறாராம். 23 வயதே ஆகும் இளம் வீரரான இவர் வருங்கால இந்தியாவின் தூண் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் இவர் மிகப்பெரிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்.

இவருடன் தான் சாரா அலிகான் ஊர் சுற்றி கொண்டிருக்கிறாராம். இத்தனைக்கும் சாரா அலிகானுக்கு வயது 27. தன்னை விட வயது குறைந்த வீரருடன் அவர் இப்படி நெருக்கமாக பழகி வருவது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அப்பாவை போல் தானே மகளும் இருப்பார் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.

Also read : மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்.. தெரியாமல் தலையை விட்டோமோ என புலம்பும் தனுஷ்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சைப் அலிகான் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்லாமல் அவரும் ஏகப்பட்டா கிசு கிசுகளில் சிக்கி இருக்கிறார்.

அதிலும் இந்த விஷயத்தில் அவர் ரொம்பவும் வீக் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் அப்பா 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது என்றும், இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் சாரா அலி கான் குறித்து கிசுகிசுத்து வருகின்றனர்.

Also read : கேப்டன் மில்லருக்கு பின் சிம்பு பட இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்.. மாஸ் அப்டேட்

Trending News