சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தனுசுக்கு செய்யும் துரோகம்.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த லதா ரஜினிகாந்த்!

தமிழில் தன்னுடைய திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என்று புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் தனுஷ். அவருடைய இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் அவருடைய உழைப்பும், திறமையும் மற்றும் அதிர்ஷ்டமும் நிச்சயம் இருக்கிறது.

அப்படி அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற அந்தஸ்து. தனுஷ் சினிமாவில் இவ்வளவு உச்சகட்ட மார்க்கெட்டில் இருப்பதற்கு இதுவும் ஒரு மறுக்க முடியாத காரணமாகும். ஆனால் அவரின் இந்த வளர்ச்சிக்கு தற்போது ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவருடைய இந்த விவாகரத்து அறிவிப்பு பல்வேறு விவாதங்களுக்கும் ஆளானது.

மேலும் தனுஷுக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் அனைவரும் இந்த விவாகரத்து முடிவை மீண்டும் பரிசீலிக்குமாறு அவருக்கு அறிவுரை கூறி வந்தனர். ஆனால் தனுஷ் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் முன்னால் மாமியார் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குநர்களிடம் தனுஷுக்கு படம் பண்ண கூடாது என்று கூறி வருகிறாராம்.

தன் மகளை வேண்டாம் என்று ஒதுக்கிய தனுஷை சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்ட வேண்டும் என்று அவர் கட்டம் கட்டி வருகிறாராம். இதனால் கூடிய விரைவில் தனுஷின் மார்க்கெட் முற்றிலும் சரியும் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது.

ஏற்கனவே அவரின் விவாகரத்து அறிவிப்பின் போது பலரும் தனுஷின் இந்த முடிவால் அவருடைய சினிமா வாழ்வில் பல சரிவும், சறுக்கல்களும் ஏற்படும் என்று கூறி வந்தனர். தற்போது தனுஷின் மாமியார் செய்யும் இந்த சதி வேலை அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ரஜினியின் குடும்பம்தான் தனுஷ் இவ்வளவு உச்சத்திற்கு வர முக்கியமான உதவிகள் செய்துள்ளனர். அதனை தவிடுபொடி ஆக்குவதற்கு தான் இந்த ஒரு ஸ்கெட்ச் போட்டு இருப்பதாக தெரிகிறது. எது எப்படியோ தனுஷ் உச்சத்தில் இருப்பதால் தற்போது இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்வி கூறி தான்.

Trending News