வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூப்பர் ஸ்டார் பட்டத்தால என்ன பிரயோஜனம்.? வம்படியாக வந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட ஹீரோயின்

Dhanush Movie Heroine: கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு சர்ச்சையாக தான் இருக்கிறது. ஆளாளுக்கு ஏதாவது ஒரு கருத்து சொல்லி ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிய சம்பவங்களும் நடந்து இருக்கிறது. அப்படித்தான் தனுஷ் பட ஹீரோயின் ஒருவரும் வான்டடாக வந்து வண்டியில் ஏறி இருக்கிறார்.

அந்த வகையில் தனுஷ் உடன் மரியான் படத்தில் இணைந்து நடித்த பார்வதி ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மலையாள நடிகையான இவர் நடிப்பில் பயங்கர திறமைசாலி. அவங்கள மாதிரி நடிக்கவே முடியாது என ரசிகர்கள் கொண்டாடும் நடிகைகளில் இவரும் முக்கியமானவர்.

அதேபோன்று தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தான் இவர் தேர்ந்தெடுத்து நடிப்பார். மேலும் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய இவர் அதனால் சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். அப்படி தற்போது அவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசி இருப்பது புது சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டு இருக்கிறது.

Also read: தனுஷை பதுங்கி அடிக்க போகும் சிம்பு.. கேப்டன் மில்லரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு படம்

அதாவது அவர் தற்போது ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன இருக்கிறது? அந்தப் பட்டம் மூலம் எதையும் கொடுக்க முடியாது. அதில் என்ன இமேஜ் இருக்கிறது? என அவர் கூறியுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் என்பதை விட சூப்பர் ஆக்டர் என்று சொல்வதுதான் சிறந்தது.

அதன்படி மலையாளத்தில் பகத் பாசில், ஆசிப், ரீமா ஆகியோர் சூப்பர் ஆக்டர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இப்போது அவர் மேல் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ஏனென்றால் மம்மூட்டி தான் மலையாள சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

72 வயதிலும் இளம் ஹீரோ போல் அவர் நடிப்பதை பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. அப்படி இருப்பவரை சூப்பர் ஆக்டர் என்று சொல்லாத பார்வதியை இப்போது ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் எந்த அளவுக்கு சர்ச்சையோ அதே போல் இப்போது மலையாள திரையுலகிலும் பிரச்சனையாக மாறி இருக்கிறது.

Also read: அட்லீயை முந்தும் லோகேஷ்.. தலைவர்-171 இல் இணையும் பாலிவுட் நடிகர்

Trending News