செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஓவரா ஆட்டம் போட்ட கலைபுலி எஸ் தாணு.. அப்போவே வேணாம்னு சொன்ன தனுஷ்

சமீபகாலமாக தனுஷின் எந்த படங்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. தொடர் தோல்வியை சந்தித்து வந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. இப்படம் வசூலிலும் வேட்டையாடி வருகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தனுஷ் நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

Also Read :வேட்டைக்காரன் தொப்பி, கையில் துப்பாக்கி.. நானே வருவேன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி நானே வருவேன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது தள்ளிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் தான் தனுஷின் நானே வருவேன் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு பிரம்மாண்ட படத்துடன் இப்படத்தை வெளியிட்டால் நானே வருவேன் படத்தின் வசூல் பாதிக்கக்கூடும்.

Also Read :ரஜினியுடன் மீண்டும் சேரப்போகும் தனுஷ்.. இளையராஜா போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா

அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தான் ஆர்வமாக இருப்பார்கள். இதனால் தனுஷ் இப்போது தான் மீண்டும் வெற்றியை நோக்கிப் போகிறோம், மிகப்பெரிய பட்ஜெட் படத்துடன் போட்டியிட வேண்டாம் என்று எண்ணி உள்ளார்..

இதனால் தான் நானே வருவேன் படத்தின் டிரைலரையும் வெளியிடாமல் தாமதபடுத்தியுள்ளனர். ஆகையால் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் நானே வருவேன் படம் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் இப்படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Also Read :சரண்டராகி தஞ்சமடைந்த தயாரிப்பு நிறுவனம்.. உச்சாணி கொம்பிலிருந்து தனுஷ் போடும் டீல்

Trending News